Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஜனவரி, 2020

'நமக்கு ரொம்ப தொந்தரவா இருக்கான்'... ஓடும் ரயிலில் இருந்து கணவனை தள்ளி விட்ட மனைவி...

வடி அருகே திருமண உறவை மீறிய காதலை கணவன் கண்டித்ததால் அவரை கொலை செய்ய ரயிலில் இருந்து தள்ளிய இளம்பெண் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடி : திருமண உறவை மீறிய காதலால் கணவனை கொலை செய்ய திட்டம். படுகாயமடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான நன்கு பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். மெக்கானிக் வேலை செய்து வரும் இவருக்கு அஷ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் அஷ்வினிக்கும் அதே பகுதியில் வசித்து வந்த அனுராக் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாட்கள் செல்ல செல்ல அஷ்வினிக்கு அனுராக் மீது காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தங்களது வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில் அஷ்வினி தனது காதலனுடன் செல்போனில் பேசியும், தனிமையில் இருந்துக்கொண்டும் பொழுதை கழித்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் ராஜேந்திரனுக்கு எப்படியோ தெரிய வர, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் காதலை கைவிட மறுத்த அஷ்வினி தனது கணவன் முன்பே அனுராக் உடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

மனைவியை திருத்த முயற்சித்த ராஜேந்திரன், அதற்காக கடவுளிடம் வேண்டி திருத்தனியில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அந்த நேரத்தில் அனுராக்கை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட அஷ்வினி, எனது கணவருக்கு நம்ம விஷயம் தெரிந்து விட்டது. அவர் என்னை அழைத்துக்கொண்டு ரயில் மூலம் திருத்தணிக்கு செல்கிறார்.

அவரை போகும் வழியிலேயே கொலை செய்து விடுங்கள். அப்போது தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்றுள்ளார். இதற்கு ஒற்றுக்கொண்ட அனுராக், தனது இரண்டு நண்பர்களை வரவழைத்து கொலை திட்டத்தை போட்டுள்ளார். இதன்படி கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ராஜேந்திரனும், அஷ்வினியும் ஆவடியில் இருந்து ரயில் மூலமாக திருத்தனிக்கு செல்ல புறப்பட்டுள்ளனர்.

இவர்களை பின்தொடர்ந்து வந்த அனுராக் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் ராஜேந்திரன் இருந்த அதே ரயில் பெட்டியில் பயணித்தனர். அப்போது முகமூடி அணிந்திருந்த மூவரும் ரயில் அரக்கோணம் அருகே சென்றுகொண்டிருந்த போது ராஜேந்திரனை பிடித்து கீழே தள்ளியுள்ளனர்.

பின்னர் தண்டவாளம் அருகே விழுந்து கிடந்த ராஜேந்திரனை குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த அவர்கள் ராஜேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், நான் தவறி விழவில்லை. என்னை யாரோ முகமூடி அணிந்திருந்த மூன்று பேர் தள்ளிவிட்டனர் எனவும் மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறினார்.

அதன்பேரில் அஷ்வினியிடம் விசாரணை செய்த போலீசாருக்கு, இந்த கொலை முயற்சியில் அஷ்வினி, அவருடைய காதலன் மற்றும் கூட்டாளிகள் இரண்டு பேருக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அஷ்வினி, அனுராக், கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராஜேந்திரனை தள்ளி விடும்போது ரயில் வேகம் குறைவாக இருந்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக