ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட்
வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல்
நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 279 மற்றும் ரூ. 379 விலையில்
இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இவற்றில் அதிவேக டேட்டா, எஸ்.எம்.எஸ்.
பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் வின்க் மியூசிக் மற்றும் எக்ஸ்டிரீம் செயலிகளை
பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
புதிய
ரூ. 279 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்டாக்
வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரூ.
379 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 6 ஜி.பி. அதிவேக டேட்டா, 900
எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு
வழங்கப்படுகிறது. இத்துடன் வின்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டிரீம் செயலியை
பயன்படுத்தும் வசதி மற்றும் ஃபாஸ்டாக் வாங்குவோருக்கு ரூ. 100 கேஷ்பேக்
வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக