தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் அங்கு சுற்றுப்புறத்தில் உள்ள காட்டெருமைகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்துவிட்டன.
இதனை கண்டு அங்குள்ள வேட்பாளர்கள், முகவர்கள், தொண்டர்கள் என அங்குள்ளவர்ர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக