டிராய் அதிரடி! கேபிள் டிவி சேனல்களின் விலைகள் குறைப்பு; இனி 200 சேனல்களுக்கான அதிகபட்ச விலை இதுதான்!
புதிய பொடியன்
வியாழன், ஜனவரி 02, 2020
டிராய்
(TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது நுகர்வோர்
நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியில், கேபிள் மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான புதிய
ஒழுங்குமுறை கட்டமைப்பில் திருத்தங்களைச் செய்துள்ளது. இந்த அதிரடி திருத்தத்தின் விளைவாக
இனிமேல் கேபிள் டிவி பயனர்கள் குறைந்த சந்தா விலையின் கீழ் அதிக சேனல்களை அணுக முடியும்.
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை
ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலவசமாக அணுக கிடைக்கும் அத்துணை சேனல்களுக்குமான
மாத வாடகையானது ரூ.160 க்குள் இருக்க வேண்டும். ஒரு நபரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட
தொலைக்காட்சி இணைப்புகள் இருக்கும் வீடுகளில், அறிவிக்கப்பட்ட நெட்வொர்க் கொள்ளளவு
கட்டணத்தில் (NCF) இருந்து அதிகபட்சம் 40 சதவீதம் வசூலிக்கப்படும் என்று முடிவு செய்துள்ளதாகவும்
அந்த டிராய் அறிக்கை கூறுகிறது.
ரூ.130 ஆக குறைத்துள்ளது!
பல்வேறு விதிகளை ஆராய்ந்த பின்னர், டிராய் 200 சேனல்களுக்கான அதிகபட்ச என்.சி.எஃப்
கட்டணத்தை ரூ.130 ஆக (வரியை சேர்க்காமல்) குறைத்துள்ளது. கூடுதலாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு
அமைச்சகத்தால் கட்டாயமாக அறிவிக்கப்பட்ட சேனல்கள் ஆனது என்.சி.எஃப் இல் உள்ள சேனல்களின்
எண்ணிக்கையில் கணக்கிடப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விநியோக தள இயங்குதளங்களுக்கு (டிபிஓ) ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட
நீண்ட கால சந்தாக்களுக்கு தள்ளுபடியை வழங்குவதற்கான அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்போது புதிய விலை நிர்ணயம்
அறிவிக்கப்படும்?
கூடுதலாக, ரூ.12 அல்லது அதற்கும் குறைவான எம்ஆர்பி கொண்ட சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பாளர்கள்
வழங்கும் பொட்டிக்கின் ஒரு பகுதியாக இருக்க அனுமதிக்கப்படும் என்று டிராய் முடிவு செய்துள்ளது,
அதாவது லா கார்டே சேனல் உச்சவரம்பானது இப்போது ரூ.19 முதல் ரூ.12 வரை குறையும். கேபிள்
டிவி ஆப்ரேட்டர்கள் ஜனவரி 15 க்குள் புதிய விலை கட்டமைப்பை அறிவிக்குமாறும் டிராய்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் ப்ரோகிராம்
கைடு!
மேலும் டிபிஓக்களுக்கு எலக்ட்ரானிக் ப்ரோகிராம் கைடு (ஈபிஜி) டிவி சேனல்களை வைக்க கூடுதல்
நெகிழ்வுத்தன்மையை வழங்குவதையும் டிராய் பரிசீலித்துள்ளதுடன், ஈபிஜியில் சேனல்களை வைக்கும்
போது ஒரு ஜேனரின் கீழ் உள்ள ஒரு மொழி சேனலை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளது.
எப்போது முதல் அமலுக்கு
வரும்?
இத்தகைய ஈபிஜி லே அவுட் ஆனது கட்டாயமாக டிராய் க்கு தெரிவிக்கப்பட வேண்டும், மேலும்
ஆணையத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஆனது ஒளிபரப்பு மற்றும் கேபிள்
டிவி சேவைகளுக்கான அதன் 2017 கட்டண வரிசையில் கட்டுப்பாட்டாளர் செய்த மாற்றங்களின்
ஒரு பகுதியாகும். இவைகள் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக