சீனாவின்
முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஓப்போ (OPPO), இந்தியாவிலும் அதன் கிளையை
நிறுவியுள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் விற்பனையை
அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உற்பத்தியை
அதிகரிக்க திட்டம்
இந்த
நிலையில் இன்றைய இந்திய மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வரும், ஸ்மார்ட்போன்களில்
முக்கிய பங்கு வகிக்கும் ஓப்போ நிறுவனம் 2020ம் ஆண்டில் 100 மில்லியன்
ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது எனவும் இந்த நிறுவனத்தின்
மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது தவிர சில்லறை விற்பனையிலும் ஒரு
ஆக்ரோஷமான உந்துதலை தள்ள இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில்
கூறப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா
திட்டத்தில் கவனம்
இது
குறித்து ஓப்போ இந்தியாவின் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் துணைத் தலைவர்
சுமித் வாலியா கூறுகையில், உற்பத்தியாளர்களின் கவனம் அவர்களின் வளர்ச்சி வேகத்தை
அதிகரிப்பதாக இருக்கும். இது தவிர உற்பத்தியாளர்கள் இந்தியாவில் 100 மில்லியன்
யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதால், மேக் இன் இந்தியா திட்டத்தில்
தொடர்ந்து கவனம் செலுத்துவர் என்றும் கூறியுள்ளார்.
தொழில்நுட்பத்தை
உருவாக்குவதிலும் கவனம்
மேலும்
தற்போது இந்தியாவில் 4ஜி சேவை மட்டுமே இருக்கும் நிலையில், இந்த நிறுவனம் 5 ஜி
சேவையையினை மேம்படுத்த கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும்
கூறப்பட்டுள்ளது.
2020 புதுமையான
ஆண்டாக இருக்கும்
ஸ்மார்ட்போன்
உற்பத்தியாளர்களுக்கு 2020 ஒரு புதுமையான ஆண்டாக இருக்கும் என்றும்
எதிர்ப்பாக்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 5ஜி இணைப்பு ஒரு
யதார்த்தமாக மாறும் வாய்ப்புகள் காரணமாக, ஸ்மார்ட்போன் உற்பத்தியில் புதுமையான
கண்டுபிடிப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது பரிமாற்ற
வேகங்களில் 4ஜியை விட 200 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
சீனாவின் ஆதிக்கம்
இந்தியாவின்
ஏற்கனவே கணிசமான அளவு சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தை வகித்து வரும் நிலையில்; சீனா
நிறுவனங்களின் அதிரடியான நடவடிக்கைகளினால் இந்தியாவின் இதன் பங்கு இன்னும்
அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சீனா நிறுவனங்களின் ஆதிக்கம்
இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில்
வேலை அதிகரிக்கும் என்றாலும், இந்தியா நிறுவனங்கள் சில காணமல் போவது கவலையளிக்கும்
விதமாகவே உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக