>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 9 மார்ச், 2020

    வெஜிட்டேரியன்... நான் வெஜிட்டேரியன்... என்னவா இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்கலாம் வாங்க...!!        

    டாக்டர் : ஆப்ரேஷன்ல பேஷண்ட் இறந்துட்டாங்க, சீஃப் டாக்டர்கிட்டையும், சொந்த காரங்கக்கிட்டையும் எப்படி இதை சொல்லப்போறேன்னு தெரியல?
    மற்றவர் : கவலைப்படாதீங்க டாக்டர். நீங்க செஞ்சது ஆபரேஷன் இல்ல! போஸ்ட் மார்ட்டம்தான்.
    டாக்டர் : 😳😳
    ------------------------------------------------------------------------------------------------
    மனைவி : திருடன் வீட்டுக்குள் புகுந்து திருடிக்கிட்டு இருக்கிறான். நீங்க வாயக்கூட திறக்காம பாத்துக்கிட்டு இருக்கீங்களே?
    கணவன் : சத்தம் போட்டுச் சொல்லாதே! நான் கட்டியிருக்கிற தங்கப்பல் தெரிஞ்சிடப் போவுது.
    மனைவி : 😩😩
    ------------------------------------------------------------------------------------------------
    சுரேஷ் : டேய் சங்கர்... நீ வெஜிடேரியனா... இல்ல நான் வெஜிடேரியனா?
    சங்கர் : நான் வெஜிடேரியன்தான். நீ என்னன்னு எனக்கு எப்படிடா தெரியும்?...
    சுரேஷ் : 😑😑
    ------------------------------------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!
    பெரும்பாலான சாதனைகள் சுலபமாக நடைபெற்றுவிட்டால்
    முயற்சி என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமலேயே போய்விடும்.

    வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை
    தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.
    ஒரு பலசாலி என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமே.
    ------------------------------------------------------------------------------------------------
    யாதும் சாத்தியமே...
    உன் மனதில் திடம் இருந்தால்...
    அதை நீ செய்ய உன்னுள் ஒரு துணிவு வந்தால்...
    இந்த உலகில் அதுவாகவே நிகழ்வது உன் பிறப்பு, இறப்பு மட்டுமே.
    மற்ற அனைத்தையும் மாற்றுவது அவரவரின் சுய விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
    இன்று நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? என்றுமே இது நிலைக்குமா?
    இன்று நீ கவலையில் உள்ளாயா? எப்போதுமே இது நீடிக்குமா?
    எதுவும் நிரந்தரமில்லை... ஆதலால் சிந்தித்து செயலாற்று.
    ------------------------------------------------------------------------------------------------
    தனிமை...!!
    தனியாய் இருப்பவர்களை உங்களால் அறியவே முடியாது...
    அவர்கள் தனிமைக்கு தன்னை ஒப்புக்கொடுத்து,
    தனிமையை துணையாய் வார்த்துக் கொண்டவர்கள்...
    தனிமைக்கு பயப்படுபவர்களை மட்டும்தான் உங்களால் இனங்கான முடியும்...
    அவர்கள் தங்களை தனிமை விரும்பி என்று பிரகடனம் செய்வார்கள்...!!

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக