போராட்ட குணமும், மனப்பக்குவமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மனதில் புதுவிதமான எண்ணங்கள் மற்றும் இலட்சியங்களை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை அமைத்து எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி காண்பீர்கள். இளைய சகோதரர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். தம்பதியினரிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். சொந்த ஊர் பயணம் மேற்கொள்வதற்கான செயல்பாடுகளில் சில தடைகளுக்கு பின்பே எண்ணிய எண்ணம் ஈடேறும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்புகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். நினைவுத்திறனில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் முயற்சிக்கேற்ப முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு மனதில் நினைத்த எண்ணங்கள் சில போராட்டங்களுக்கு பின்பு நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும்போது அமைதியுடன் செயல்படவும். புத்திரர்கள் பற்றிய கவலை மனதில் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் சாதகமாக அமையும். கணவன், மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு ஒருவிதமான புத்துணர்ச்சியை உருவாக்கும். பணியில் இருக்கக்கூடிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் உரையாடும்போது கோபத்தை குறைப்பது நன்மதிப்பை அதிகப்படுத்தும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு முயற்சிக்கேற்ற பலன்களும், அங்கீகாரமும் கிடைப்பதற்கு அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதானமற்ற பேச்சுக்களை தவிர்த்து பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளின் மூலம் பகைமையை உருவாக்கிக் கொள்ளாமல் ஆதரவான சூழல்களை அமைத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளை பெற்று செயல்படவும்.
விவசாயிகளுக்கு :
விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். இயற்கை விவசாய முறைகளை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் சேமிப்புகளை அதிகப்படுத்தலாம். கடன்களை அடைப்பதற்கான சூழல்களும், தனவரவுகளும் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் உடல் அலைச்சலும், சோர்வும் தோன்றி மறையும். புதுவிதமான தொழில்நுட்பம் சார்ந்த எண்ணங்களும் அதை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பரிகாரம் :
திங்கட்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரை வழிபட்டு வர தொழில் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக