>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 28 ஏப்ரல், 2020

    ஹா... ஹா... இதுக்கு இதுதான் அர்த்தமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!

    கணவன் : ச்ச்சீ! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காது.
    மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வெச்சுருக்கேன்.
    கணவன் : 😩😩
    ---------------------------------------------------------------------
    ராமு : 'அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறாரு."
    சோமு : 'எதுக்கு?"
    ராமு : 'ஆப்ரேஷன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுத போறாராம்."
    சோமு : 😳😳
    ---------------------------------------------------------------------
    விமல் : அந்த பட்டாசு கடைக்காரர் இதுக்கு முன்னாடி பூக்கடை வெச்சிருந்திருப்பாரு போல தெரியுது.
    கமல் : எப்படி சொல்ற?
    விமல் : சரவெடி கொடுங்க-ன்னு கேட்டா, எத்தனை முழம்-னு கேட்குறாரே.
    கமல் : 😝😝
    ---------------------------------------------------------------------
    கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்-னு சொன்னான், அதுக்கு நீ ஏன்டி முழிக்கிற?
    மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.
    கணவன் : 😬😬
    ---------------------------------------------------------------------
    முடிஞ்சா இதை சொல்லுங்க...!!

    🌟 கூட்டுக் களவாணிகள் கூட்டமாக கோட்டுப் போட்டு ஏட்டு வீட்டில் திறந்த பூட்டை பூட்டிப் பூட்டிப் பார்த்தார்கள்.

    🌟 தக்காளி தக்காளி அக்கா வாங்கின தக்காளி, தக்காளி தக்காளி அழுகிப் போன தக்காளி.
    ---------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போ டியைந்த தொடர்பு.

    விளக்கம் :

    அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.
    ---------------------------------------------------------------------
    இதுக்கு இதுதான் அர்த்தமா?... கடி ஜோக்ஸ்..!

    🌟 காலேஜ் கேட்டுக்கு வெளியே நின்னா சஸ்பெண்டுன்னு அர்த்தம்.
    கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டுக்கு வெளியே நின்னா ஹஸ்பெண்டுன்னு அர்த்தம்.

    🌟 மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம்.
    ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியுமா...?



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக