>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 9 ஜனவரி, 2020

    ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்களாம்... அப்படியா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

    மனைவி : எல்லை தாண்டிய பயங்கரவாதம்-னா என்னங்க?
    கணவன் : நீ என் மேல பூரி கட்டைய தூக்கி எறியும்போது, அது தெருவுல போறவங்க மேல படுதுல்ல அதான்..
    மனைவி : 😡😡
    ----------------------------------------------------------------------------------------------------
    உங்க வீட்டுலயும் இப்படித்தானா?

    வீட்டில் கேஸ் அடுப்பு ரிப்பேரானா மனைவிக்கு சந்தோஷம்..
    ஃபிரிட்ஜ் ரிப்பேரானா கணவனுக்கு சந்தோஷம்....
    ----------------------------------------------------------------------------------------------------
    சிந்திக்க வைக்கும் கதை...!!

    🌟 ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

    🌟 குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, 'மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்" என்று கூறி அமர்ந்துவிட்டார்.

    🌟 நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

    🌟 'மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டார் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

    🌟 பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, 'எப்படி மைலார்ட்?" என்று கேட்டார்.

    🌟 அதற்கு நீதிபதி சொன்னார், 'அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை."
    ----------------------------------------------------------------------------------------------------
    வெற்றி பெறுவதற்கான வழிகள்!!

    வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே.

    என்ன செய்கிறாய்? என்பதை அறிந்து செய்.

    செய்வதை விரும்பிச் செய்.
    செய்வதை நம்பிக்கையோடு செய்.
    ஆசையில்லாத முயற்சி, முயற்சியில்லாத ஆசை இரண்டிலுமே பயனில்லை.
    எதிர்காலத்தில் என்ன நேருமோ என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை சிறப்பாக செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
    ----------------------------------------------------------------------------------------------------
    இது எப்படி இருக்கு?

    ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
    பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...
    அருகில் இருந்தும் பேச முடியவில்லை...
    உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... - எக்ஸாம் ஹாலில்.
    என்ன கொடுமை சார்? இது...🤦‍

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக