>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 7 செப்டம்பர், 2020

    உயிரற்ற பறவை.. ஊர் ஊராய் பறக்கிறது.. யோசியுங்கள் - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

    -------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    -------------------------------------
    மாப்பிள்ளை வீட்டார் : பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
    பெண் வீட்டார் : பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
    மாப்பிள்ளை வீட்டார் : 😝😝
    -------------------------------------
    விடுகதைகள்...!!
    -------------------------------------
    1. உயிரற்ற பறவை, ஊர் ஊராய் பறக்கும். அது என்ன?

    விடை : விமானம்.

    2. விறகெரியத் துணையாகும், விளக்கெரியப் பகையாகும். அது என்ன?

    விடை : காற்று.

    3. கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன். அவன் யார்?

    விடை : பூட்டு.

    4. மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன். அது என்ன?

    விடை : மழை.

    5. முற்றத்தில் நடப்பான். மூலையில் படுப்பான். அவன் யார்?

    விடை : துடைப்பம்.

    -------------------------------------
    சில தத்துவங்கள்..!!
    -------------------------------------
    🌟 மகானைப் போல வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை... மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..!

    🌟 வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது..! இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப்பெரும் வலிகளே நாளை உங்களின் மிகப்பெரும் பலமாக மாறிவிடுகின்றது..!

    🌟 முயற்சிக்கு முன்னால் கேலிகள், கிண்டல்கள், துரோகங்கள், சோகங்கள், காயங்கள், சோதனைகள், தோல்விகள் யாவும் தோற்று ஒரு நாள் மாய்ந்துபோகும்..!
    -------------------------------------
    கலக்கலான கடி...!!
    -------------------------------------
    👉 குத்துச் சண்டை வீரருக்கு பிடித்த விளக்கு எது? - குத்து விளக்கு

    👉 யார் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்வார்கள்? - 59 கல்யாணங்கள் செய்து முடித்தவர்கள்.

    👉 பொய் சொல்லும் ஆங்கில மாதம் எது? - ஜூ'லை"

    👉 காட்டில் வசிக்காத புலி எது? - அம்'புலி"

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக