>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 7 செப்டம்பர், 2020

    சிரிங்க.. சிந்தியுங்க.. இதுதான் வாழ்க்கை - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

    -------------------------------------
    இது சிரிக்க மட்டுமே !!
    -------------------------------------
    மனைவி : பாயாசம் ஒரு தரம், பாயாசம் இரண்டு தரம், பாயாசம் மூனு தரம்...
    கணவன் : என்னம்மா கிச்சன்ல சத்தம் போடுற.
    மனைவி : சமையல் புத்தகத்துல 'பாயாசம் கொதித்து முடித்தவுடன் ஏலம் போட்டு இறக்கவும்-ன்னு" போட்டு இருந்ததுங்க... அதான்..
    கணவன் : 😏😏
    -------------------------------------
    கவின் (கவலையுடன்) : வெய்ட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலையே...
    ராமு : அப்படி என்ன படிப்பு படிச்சீங்க?
    கவின் : Pre-KG ,LKG,UKG எல்லாம் படிச்சு இருக்கோம்ல.
    ராமு : 😬😬
    -------------------------------------
    இதுதான் வாழ்க்கை...!!
    -------------------------------------
    மண் அள்ளும் JCB
    மனிதனை அள்ளும் அவல நிலை..

    பஞ்சு மெத்தையில் தூங்கியவன்
    ப்ளாட்பாரத்தில்கூட படுக்க இடமின்றி அலைகிறான்..

    பீட்ஸா பர்கரை வீட்டுக்கே வரவழைத்தவன்
    தண்ணீருக்கும், ப்ரெட்டுக்கும் அலைகிறான்..

    ஒருவரின் ஆடம்பர வாழ்க்கை ஒரு நாளில் மாறிவிடும்..
    -------------------------------------
    இது சரி அல்லவா?
    -------------------------------------
    டாஸ்மாக்ல ஒரு பையன் வேலை பாத்துக்கிட்டு இருந்தான். ஒரு குடிகாரன் அவன பக்கத்துல கூப்பிட்டு சொன்னான் 'நீயெல்லாம் இங்க வராத..!! சீக்கிரம் குடிகாரன் ஆயிடுவ.."

    அதற்கு அவன் சொன்னான்... நீங்களும் இனிமே இங்கே குடிக்க வராதீங்க. நாளைக்கு உங்க பையனும் அப்பாவ இழந்துட்டு இங்க வேலைக்கு வருவான் என்று..
    -------------------------------------
    இது உண்மை தானே?...
    -------------------------------------
    🔅 பைக் வாங்குறப்ப இருந்த சந்தோஷம்..
    பெட்ரோல் போடும்போது வர்றதே இல்லை...

    🔅 சின்ன வயசுல நம்மக்கிட்ட சில்லறை காசு இருந்தா சாக்லேட் வாங்கி திண்போம்..
    இப்ப கடைக்காரன்கிட்ட சில்லறை காசு இல்லைன்னா நாம சாக்லேட் திங்க வேண்டியதாயிருக்கு...
    -------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    -------------------------------------
    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப் புடைத்து.
    -------------------------------------
    விளக்கம் :
    -------------------------------------
    நடுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளோருக்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக