இது சிரிப்பதற்கான நேரம்...!!
மனைவி : நான் ரெண்டு மணி நேரம் வெளிய போறேன்... உங்களுக்கு ஏதாவது வேணுமா?
கணவன் : வேண்டாம்... எனக்கு இதுவே போதும்...
மனைவி : 😡😡
-------------------------------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
1. பறிக்கப் பறிக்கப் பெரிதாகிறது... இது என்ன?
2. பல்லாயிரம் பேர் சேர்ந்து கட்டி முடித்த மண்டபம், ஒருவன் கைப்பட்டு இடிந்து விழுந்தது. இது என்ன?
3. தொடர்ந்து வருபவனுக்கு பேச வாயில்லை... அவன் யார்?
4. வீடு தேடி வருவார், வந்ததும் சேதி சொல்வார். யார் இவர்?
5. பூமியிலே பொன் மரப்பாச்சி, புதைத்து வைத்திருக்கு... இது என்ன?
விடைகள் :
1. குழி
2. தேன் கூடு
3. நிழல்
4. தபால்காரர்
5. மஞ்சள் கிழங்கு.
-------------------------------------------------------------------------------------------
ஒரு டவுட்...!!
டியூசன் போனாதான் நல்லா படிப்பாங்கன்னா... அப்போ எதுக்கு ஸ்கூலுக்கு போகணும்... இத கேட்டா நம்மளதான் அடிக்க வராங்க...🧐🧐
-------------------------------------------------------------------------------------------
அட அப்படியா?
அவளை கல்யாணம் பண்ண முடியலையேன்னு சிலர்...😩😩
இவளை கல்யாணம் பண்ணிட்டமேன்னு சிலர்...😖😖
எவளையுமே கல்யாணம் பண்ண முடியலையேன்னு பலர்...😕😕
ஆக எவனும் நிம்மதியா இல்ல...!😌😌
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக