Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

தாக்கல் செய்யப்பட்டது வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா! – விவசாயிகள் மகிழ்ச்சி!

TN assembly

காவிரி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

காவிரி வேளாண்மை பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்காத வகையில் அந்த பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்க வகைசெய்யும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி பல்வேறு ஆலைகளை டெல்டா பகுதிகளில் தொடங்குவதற்கும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் தடை விதிக்க அந்த மசோதா வழிவகை செய்கிறது. இதற்காக வேளாண் பாதுகாப்பு மண்டல குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக