அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள்
பயணமாக அவரது மனைவி மெலானியா டிரம்புடன் வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் ஏர்போர்ஸ் ஒன் என்ற விமான மூலம் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு
வரும் ட்ரம்பின் விமானம் இது அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த
ஏர்போர்ஸ் ஒன் விமானம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும். இது காரணமாகவே ட்ரம்பின்
விமானம் பறக்கும் வெள்ளை மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏர்போர்ஸ் ஒன் விமானம்
232 அடி நீளமும் 195 அடி அகலமும் கொண்டது. பின்னர் 3 தளங்களைக் கொண்ட இந்த விமானத்தின்
மொத்த பரப்பளவு 4,000 சதுர அடியாகும். விமானத்தின் உட்பகுதியானது 5 நட்சத்திர உணவகத்துக்கு
ஈடாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானத்துக்குள்
அதிபர் தங்குவதற்காக சகல வசதிகளைக் கொண்ட பிரத்யேக அறை, அதிபருடன் வரும் உயரதிகாரிகள்
தங்குவதற்கென தனித்தனி அறைகள், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவக் குழுவினர் அடங்கிய
மருத்துவமனை, செய்தியாளர் சந்திப்பு அறை, கருத்தரங்க அறை ஆகியவை உள்ளன. அதேபோல், ஒரே
நேரத்தில் 100 பேருக்கு உணவு சமைக்கும் வசதிகள் கொண்ட சமையற்கூடமும் அமைந்துள்ளது.
மேலும் விமானத்தில் உள்ள அனைத்து ஜன்னல்களும், பீரங்கி குண்டுகளால் கூட துளைக்க முடியாத
வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், விமானத்தின் அடிப்பகுதியானது அணு குண்டு
தாக்குதலையும் தாங்கும் கட்ட மைப்பைக் கொண்டது. அதுமட்டுமின்றி, விமானம் முழுவதிலும்
நவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து விமானத்தை
தாக்க வரும் ஏவுகணைகளை குழப்பமடைய செய்து திசை மாற்றி விடக்கூடிய வகையில் இந்த
ரேடார்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், தேவை ஏற்படும்போது ஏவுகணைகளைக்
கொண்டு தாக்குதல் நடத்தவும் இந்த விமானத்தால் முடியும். மேலும் பறந்து
கொண்டிருக்கும் போதே இந்த விமானத்தில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.
எந்த நேரமும் வெள்ளை மாளிகையை தொலைபேசி மூலமாகவும், காணொலி மூலமாகவும் தொடர்பு
கொள்ளும் வசதிகள் இருக்கின்றன. அதனால் 85 தொலைபேசிகளும், 20 அதி நவீன
தொலைக்காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக