Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 31 ஜூலை, 2021

பேஸ்புக் நிறுவனம் விரைவில் வெளியிடும் அதிநவீன சாதனம்.!

 ஓரங்கட்டும் என்று நிபுணர்கள்

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடிகளை விரைவில் பேஸ்புக் நிறுவனம் வெளியிடும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள்
உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

பேஸ்புக் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.அதேபோல் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் ஒரு நாள் ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் என்று நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன்பு வெளிவந்த தகவலின்படி இந்த Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்க பேஸ்புக் நிறுவனம்EssilorLuxottica நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்நிறுவனங்கள் உருவாக்கி வரும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் ஒரு சில அம்சங்கள் மட்டுமே ஆன்லைனில் கசிந்துள்ளது.

அதன்படி இது ஏஆர் எனப்படும் ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஸ்மார்ட் கிளாஸாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. மேலும் இந்த ஏஆர் கண்ணாடியானது வழக்கமான கண்ணாடி போல ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். இதனால் எதிரே இருக்கும் காட்சிகளை நீங்கள் பார்க்கலாம் என்பதுடன், அந்த கண்ணாடி டிஜிட்டல் திரையாகவும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இதேபோல் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 43வது பொதுக் கூட்ட நிகழ்வில் ‘ஜியோ கிளாஸ்' என்ற ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தி 3டி தொழில்நுட்பத்தில் வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு பேரோடு இந்த கண்ணாடியை பயன்படுத்தி வீடியோ கால் பேச முடியும்.

குறிப்பாக கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ஜியோ கண்ணாடியில் எச்டி காட்சிகளைப் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு விடியோகால் பேசிக் கொண்டிருக்கும் போதே பட விளக்கங்களை பயன்படுத்தி அனைத்து விவரங்களையும் விவரமாக எடுத்துச் சொல்வதற்கான வசதியும் இதில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஜியோ ஸ்மார்ட் கண்ணாடி 75 கிராம் எடை கொண்டுள்ளது என்றும் இதைப் பயன்படுத்தி வெர்ச்சுவல் கிளாஸ் ரூம் மற்றும் வெர்ச்சுவல் டூருக்கு செல்லும் வசதிகள் கூட உள்ளன என்றும் கூறப்படுகிறது. பின்பு இந்த கண்ணாடியில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஜியோ கிளாஸ் விலை மற்றும் விற்பனைப் பற்றிய தகவலை இன்னும் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக