Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 31 ஜூலை, 2021

பெங்களூர் தேஜஸ் நிறுவனத்தை கைப்பற்றும் டாடா.. ரிலையன்ஸ்-க்கு இணையாக அதிரடி..!

  தேஜஸ் நெட்வொர்க்

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா, சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ரீடைல் மற்றும் ஈகாமர்ஸ் துறையில் மட்டும் அல்லாமல் பல துறையில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்ய நிறுவனங்களை அடுத்தடுத்து கைப்பற்றி ரிலையன்ஸ் குழுமத்திற்குக் கடுமையான போட்டி அளித்து வருகிறது.

இந்நிலையில் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்தைக் கைப்பற்ற உள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்தைத் தற்போது டாடா கைப்பற்றியுள்ளது.

தேஜஸ் நெட்வொர்க்

இந்தியாவில் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மற்றும் இண்டர்நெட் சேவை வழங்குவோருக்கு டேட்டா நெட்வொர்க்கிங் சேவை அளிக்கும் நிறுவனமான தேஜஸ் நெட்வொர்க் மூலம் தனது எண்டர்பிரைசர்ஸ் டெலிகாம் சேவையை மேம்படுத்த டாடா குழுமம் முடிவு செய்து இந்நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.

டாடா சன்ஸ்

சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் நிறுவனம் தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் 72 சதவீத பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது. மேலும் தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடம் இருந்தும் பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.

டாடா சன்ஸ் - தேஜஸ் நெட்வொர்க்

டாடா சன்ஸ் நிறுவனம் தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 258 ரூபாய் விலையில் கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று இந்நிறுவன பங்குகள் 5 சதவீதம் உயர்வில் 256.55 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

பார்தி ஏர்டெல்

டாடா குழுமம் அதிகம் நஷ்டம் அளிக்கும் வர்த்தகத்தை விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் 2019ல் தனது வயர்லெஸ் டெலிகாம் சேவை வர்த்தகம் முழுவதையும் பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. இதன் பின்பு எண்டர்பிரைசர்ஸ் டெலிகாம் சேவை பிரிவில் அதிகக் கவனம் செலுத்தி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

டாடா டோகோமோ

2019 டாடா டோகோமோ வர்த்தகத்தை விற்பனை செய்த பின்பு டெலிகாம் பிரிவில் டாடா செய்யும் மிகப்பெரிய வர்த்தகமாகத் தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் 72 சதவீத பங்குகளை 2,923 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற உள்ளது.

டாடா-வின் டெலிகாம் வர்த்தகம்

டாடா குழுமத்தின் டெலிகாம் வர்த்தகம் தற்போது டாடா கம்யூனிகேஷன்ஸ், நெல்கோ, டாடா டெலிசர்வீசஸ் என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வர்த்தகம் செய்து வருகிறது. தற்போது இந்தப் பட்டியலில் தேஜஸ் நெட்வொர்க் நிறுவனமும் சேர உள்ளது.

பெங்களூர்

2000ல் பெங்களூரில் தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்தை முதல் தலைமுறை வர்த்தகர்களான சஞ்சய் நாயக், அர்நாப் ராய் மற்றும் குமார் சிவராஜன் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். இந்நிறுவனம் 2017ல் ஐபிஓ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

டாடா மற்றும் ரிலையன்ஸ்

டாடா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மறைமுகமாக பல துறையில் போட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக ஈகாமர்ஸ், டிஜிட்டல் வர்த்தக பிரிவில் கடுமையான போட்டியை இந்தியா முழுவதும் இவ்விரு நிறுவனங்கள் உருவாக்கியுள்ளது.

டாடா விரைவில் சூப்பர் ஆப் வெளியிடும் என எதிர்பார்த்து வரும் நிலையில் தேஜஸ் நெட்வொர்க் நிறுவன கைப்பற்றல் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக