Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 28 ஜூலை, 2021

உடுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது? இன்றைய கடி.... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க....!!
-----------------------------------------------------
 
கமல் : கணக்கு புத்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா?
விமல் : தெரியலையே...
கமல் : ஏன்னா அதுக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குதுல்ல, அதனால தான்!
விமல் : 😂😂
-----------------------------------------------------
 பாபு : நம்ம தலைவரோட செல் நம்பர் இருபத்தாறு...
கோபு : என்னது இரண்டு நம்பர்தானா...?
பாபு : நான் சொன்னது... ஜெயில்ல அவரோட செல் நம்பர்!
கோபு : 😜😜
-----------------------------------------------------
 இன்றைய கடி....!!
-----------------------------------------------------
 
 👗உடுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?
.
.
.
.
.
Address😄

-----------------------------------------------------
 மொக்கை கவிதை...!!
-----------------------------------------------------
 
👀கண்கள் பேசினால் 'காதல்"

💧கண்ணீர் பேசினால் 'நட்பு"

💴பணம் பேசினால் 'சொந்தம்"

🌏எல்லோரும் பேசினால் 'உலகம்"

🙋நீ மட்டும் பேசினால் 'லூசு"😇
-----------------------------------------------------
 சிறந்த வரிகள்...!!
-----------------------------------------------------
 
💫செல்வத்தை விட மதிப்பு மிக்கது மகிழ்ச்சி. ஏனெனில், பணத்தைக் கடனாக வாங்கலாம் ஆனால், மகிழ்ச்சியை யாரிடமும் கடனாக வாங்க முடியாது.

💫சம்பாதிப்பது வாழ்க்கை இல்லை... சம்பாதித்த காசில் சந்தோஷமாக இருப்பது தான் வாழ்க்கை. 

💫சந்தோஷம் என்பது அமைவதில்லை... நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும். 

💫சந்தோஷம் என்பது நீ வாழும் இடத்தில் இல்லை. நீ வாழும் விதத்தில் தான் உள்ளது. 

💫சவாலான நாட்களை சந்தித்தால் தான் சந்தோஷமான நாட்களை அடைய முடியும். 

💫கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது... சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது.. ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது. 

💫எப்பொழுதும் மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக