Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 28 ஜூலை, 2021

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம் மாவட்டம்.

Rajaganapathi Temple : Rajaganapathi Rajaganapathi Temple Details |  Rajaganapathi- Salem | Tamilnadu Temple | ராஜகணபதி
அமைவிடம் :

ராஜகணபதி கோயில், சேலத்தின் முக்கியமான பகுதியான கடைவீதியில் அமைந்துள்ளது. இது மிகவும் புகழ் பெற்ற கோயில் ஆகும். சேலத்தின் இரு பழம் பெருமை வாய்ந்த கோயில்களின் திருத்தேர்கள் இங்கு நிலை கொண்டுள்ளன. ஆகவே இப்பகுதிக்கு, தேர் முட்டி என்ற பெயரும் உண்டு.

மாவட்டம் :

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம் மாவட்டம்.

எப்படி செல்வது?

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில் சேலம் மாநகராட்சியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் சேலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் சிறப்பு :

மூலவர் தினமும் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருவதால் 'ராஜகணபதி" என அழைக்கப்படுகிறார்.

தேவர்கள் பெருமானை அரச மர வடிவத்தில் வழிபட்டது, தேவர்களின் பாவங்களை போக்கியது, சேரமானுக்கும், ஆதிசேஷனுக்கும் தாண்டவ தரிசனம் காட்டியது, துன்மார்க்கத்தில் ஒழுகிய சரஸ்வதிக்கு சிவலோகம் கிடைத்தது, கலிங்கத்து மன்னன் ஹேமாங்கதனுக்கு மீண்டும் ராஜ்ஜியத்தை பெறும்படி பெருமான் அருள் செய்த தலம் என போற்றப்பட்ட சுகவனேஸ்வரர் தலப்பெருமைகள் ராஜகணபதிக்கும் உள்ளதால் இத்தலம் பக்தர்கள் மத்தியில் வெகு பிரசித்தம்.

400 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபனம் செய்யப்பட்டது சேலம் ராஜகணபதி கோயில். 

கலியுக கண் கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது. 

இத்தலம் காடுகளும், மலைகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் 'சைலதேசம்" என பெயர் பெற்றது.

கோயில் திருவிழா :

மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை, சதுர்த்தி நாளில் கணபதி யாகம், சிறப்பு திருமுழுக்காட்டு ஆராதனையும் நடக்கிறது. ஆவணியில் சதுர்த்தி விழா பத்து நாள் நடக்கிறது. இதில் மூன்றாம் நாள் திருக்கல்யாண நிகழ்வும், 10ம் நாள் மலர்ப் பல்லக்கு ஊர்வலமும் நடைபெறும். விழாவில் முதல் நாளான சதுர்த்தியன்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாற்றுபடியும், 8ம் நாள் முத்தங்கி சேவையும் மிக சிறப்பாகும்.

பிரார்த்தனை :

ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட்செல்வம் சேரும். தீராத நோய் தீரும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டலாம்.

நேர்த்திக்கடன் :

சுவாமிக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக