>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 27 ஜனவரி, 2020

    முறையின்றித் தொட்டால், ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான். அவன் யார்?

    சிரிக்கலாம் வாங்க..!!
    கணவன் : என்ன இது? சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது?
    மனைவி : நீங்க தான சமையல்ல ஒரு சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க? அதான் ஒரு சேஞ்சா இருக்கட்டும்னு போட்டேன்.
    கணவன் : 😩😩
    ---------------------------------------------------------------------------------------------------------
    பூஜா : அவர் ஏன் தூங்கும்போதும் கண்ணாடி போட்டுக்கிறார்?
    ராஜா : அவருக்கு அடிக்கடி டiடிசயசல போற மாதிரி கனவு வருமாம்.
    பூஜா : 😲😲
    ---------------------------------------------------------------------------------------------------------
    நண்பர் : என்ன ஜோசியரே, கிளிக்கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு?
    ஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க.
    நண்பர் : 😬😬
    ---------------------------------------------------------------------------------------------------------
    வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்காரு.
    பாபு : ஏன்?
    வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம்...
    பாபு : 😂😂
    ---------------------------------------------------------------------------------------------------------
    விடுகதைகள்...!!
    🤔 முறையின்றித் தொட்டால், ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான். அவன் யார்?

    🤔 வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்?

    🤔 மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?

    🤔 இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா?

    விடை :

    👉 மின்சாரம்
    👉 நாட்காட்டி
    👉 அணில்
    👉 மிளகாய்
    ---------------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்.

    பொருள் :

    பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
    ---------------------------------------------------------------------------------------------------------
    பழமொழி விளக்கம்..!!
    🌟 வயசு வைக்கோலா போகுதாம், கிழவி கிண்ணரம் வாசிக்குதாம்.

    🌟 கிண்ணரம் என்பது ஒரு இசைக்கருவி. இசைக்கருவி வாசிக்கும் அளவுக்கு உடல் வலிமை உள்ள கிழவி பற்றிய பழமொழி இது. அதாவது சில வயதானவர்கள், அறுத்து அடித்து வைத்த நெற்கதிர்கள் வைக்கோலாக மாறுவதுபோல, எவ்வளவுதான் முதுமை அடைந்தாலும் வலிமை குறையாது தாங்களே உழைத்து, ஓடி ஆடி வேலை செய்து சாப்பிடுவார்கள். அவர்களை இவ்வாறு கூறலாம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக