நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் தவிர, மக்கள் இடைவிடாமல் திரண்டு வரும் வேறு எந்த ஸ்ட்ரீமிங் சேவையும் இருந்தால், அது டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவையாக மட்டுமே இருக்க முடியும். இந்தியாவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, அந்நிறுவனம் அதிக பயனர்களைத் தன்வசம் சேர்த்து வருகிறது. கேம் ஆப் த்ரோன்ஸ் மற்றும் வெஸ்ட்வேர்ல்ட் போன்றவற்றை உள்ளடக்கிய எச்.பி.ஓ மற்றும் ஷோடைம் ஆகியவற்றிலிருந்து மிகவும் விரும்பப்பட்ட சில நிகழ்ச்சிகளை இந்த OTT தளம் கொண்டிருக்கிறது.
இது தவிர, டிஸ்னி பிளஸ் அதன் பெயருடன் சேர்த்ததிலிருந்து, டிஸ்னி, மார்வெல், ஸ்டார் வார்ஸ், நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் 20th சென்சுரி ஆகியவற்றின் உள்ளடக்கத்தையும் இந்த பயன்பாடு கொண்டுள்ளது. ஒரு புதிய வளர்ச்சியில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் பல புதிய சிறப்புத் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், இதைத் தவிர, டிஸ்னி + ஹாட்ஸ்டார் அதன் சாத்தியமான சந்தாதாரர்களுடன் புதிய தகவலை தற்பொழுது பகிர்ந்துகொண்டுள்ளது.
இதன்படி, இனி பழைய விலையில் பயனர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவையை பயன்படுத்த முடியாது. தற்பொழுது சந்தாதாரர்களுக்கான கட்டணம் முன்பைவிட கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் சந்தாதாரராக இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், சேவையின் புதிய சந்தாதாரர்களுக்கு, விலைகள் நிச்சயமாக உயர்ந்துள்ளது. நினைவுகூர, டிஸ்னி + ஹாட்ஸ்டார், முன்பு ஒரு விஐபி சந்தா மற்றும் பிரீமியம் சந்தாவுடன் இரண்டு அடுக்கு சந்தா மாதிரியை வழங்கி வந்தது.
ஆனால் இப்போது, இந்த சந்தா விபரங்கள் மற்றும் விலைகள் நேற்றைய கதையாக மாறிவிட்டது. தற்பொழுது நிறுவனம் மூன்று சந்தா விருப்பங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில், மொபைல் விருப்பங்கள் முதல் துவங்கி "மொபைல், சூப்பர் மற்றும் பிரீமியம் திட்டம்" என்ற மூன்று பிரிவுகளின் கீழ் திட்டங்கள் இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. முதலாவதாக, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இருந்து கிடைக்கும் மொபைல் திட்டம் ஒரு சாதன ஸ்ட்ரீமிங் திறனைக் கொண்டிருக்கும் மொபைல் பயனர்களுக்கான திட்டமாகும். இதில் சந்தாதாரர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் கிடைக்கும் முழு அளவிலான உள்ளடக்கத்தையும் அனுபவிக்க முடியும்.
இது முன்பு பிரீமியம் அல்லது விஐபி குறிச்சொல்லின் கீழ் இருந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல் இது செயல்படும். இந்த திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும் தரம் எச்டி தரத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆண்டுக்கு ரூ. 499 விலையில் கிடைக்கும். நினைவுகூர, முந்தைய டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் விஐபி சந்தாவின் விலை வெறும் ரூ .399 ஆகும். எனவே சந்தாவுக்கான அடிப்படை விலை தற்பொழுது உயர்ந்துள்ளது.
இரண்டாவது வகை சந்தா மொபைல் அல்லது பிற சாதனங்களின் வரம்பு இல்லாமல் இரண்டு திரைகளை அனுமதிக்கும் "சூப்பர்" திட்டமாகும். இதில் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும் தரம் எச்டி மட்டும் தான், இதிலும் 4K கிடைக்காது. இந்த சந்தாவின் விலை ஆண்டுக்கு ரூ .899 ஆக வைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் சந்தாவைப் பொறுத்தவரை, சந்தாதாரர்களுக்கு 4 திரைகள் கிடைக்கும், மேலும் அவர்கள் 4K இல் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய முடியும். பிரீமியம் சந்தாவின் விலை ஆண்டுக்கு ரூ. 1,499 ஆக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக