ராசிகளில்
சந்திரன் !!
சூரியன் அளிக்கும் ஒளியில் நாம் புத்துணர்ச்சி அடைந்தாலும் நம் மனமானது என்றும் ஸ்திர தன்மையில்லாது தினம், தினம் பல மாற்றங்களை காண்கிறது.
தோன்றும் எண்ணங்களிலும் வேறுபாடுகள் உண்டாகின்றன. ஆரோக்கிய கதிர்களை நம் உடலும், மனமும் ஏற்றாலும் சில தருணங்களில் வலிமையற்ற சூழலாகவே உள்ளது.
இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் இராசிகளில் சந்திரனின் நிலையே காரணம் என்பதனை நம்மால் அறிய இயலும்.
கிடைக்கும் பொன்னான சூழலை அனுபவிக்க சூரியனின் வெப்பம், சந்திரனின் குளிர்ச்சியும் இருந்தால் மட்டுமே அந்த சூழலானது இன்பமான தருணமாக அமையும்.
சந்திரன் இருவிதமான நிலைகளில் காணப்படுவார். அதாவது வளர்பிறை சந்திரன் மற்றும் தேய்பிறை சந்திரன்.
வளர்பிறையில் சிவபெருமானால் அளித்த வரத்தால் நன்மை செய்யும் தேவராகவும், தேய்பிறையில் தட்ச பிரஜாபதி அளித்த சாபத்தால் நிலையற்ற எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளை கொண்டவராகவும் இருப்பார். எனவே, பலன்களை அறிவதில் இதை கருத்தில் கொள்வது மிகவும் அவசியமாகும்.
சந்திரன் ஜீவராசிகளின் எண்ணங்களை படைக்கும் வல்லமை கொண்ட மனதிற்கும், அதை அகத்தே கொண்டுள்ள உடலிற்கும் காரணம் ஆவார். மேலும் தாய்க்கும் இவரே காரகர் ஆவார்.
ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் நிற்கும்போது ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றி காண்போம்.
மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாயுடன் சந்திரன், நண்பர் என்ற முறையில் சமநிலையில் நிற்கின்றார். இதனால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :
தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
இவர்களின் முன்னேற்றத்தில் தாயாரின் ஆதரவும், ஆலோசனையும் இருக்கும்.
பெண்கள் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
பயணங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.
கால்நடைகளால் இலாபம் அடையக்கூடியவர்கள்.
வைராக்கியம் மிக்கவர்கள்.
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
கேளிக்கைகளிலும், கலைகளை ரசிப்பதிலும் மிகுந்த விருப்பம் உடையவர்கள்.
நேர்த்தியான உடைகளை விரும்பி அணியக்கூடியவர்கள்.
ரசித்து, ருசித்து சாப்பிடக்கூடியவர்கள்.
உத்தியோகத்தில் மேற்பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
செய்யும் தொழிலில் திறமை கொண்டவர்கள்.
ஏதேனும் ஒரு துறையின் மீது ஈடுபாடு கொண்டு அதில் வெற்றி பெறக்கூடியவர்கள்.
உறவினர்களிடம் அன்பும், மரியாதையும் கொண்டவர்கள்.
குணமுள்ள சிறந்த தோழர்களை உடையவர்கள்.
எதையும் பலமுறை சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக