Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 14 செப்டம்பர், 2020

சிங்கத்தை கண்டு பயப்படாத ஒரு விலங்கு எது தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க
-------------------------------------
அருண் : கப்பலே கவுந்தாலும் கன்னத்துல கை வைக்கக்கூடாதுன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா?
குமார் : தெரியலையே...
அருண் : கன்னத்துல கைய வெச்சா எப்படி நீச்சல் அடிக்க முடியும்?
குமார் : 😠😠
-------------------------------------
கமல் : கப்பல் படையில சேர்ந்திருக்கீங்களே உங்களுக்கு நீந்தத் தெரியுமா?
விமல் : தெரியாது...!! ஏன், விமானப்படையில நீங்க சேர்ந்திருக்கீங்களே உங்களுக்கு மட்டும் பறக்கத் தெரியுமா?
கமல் : 😐😐
-------------------------------------
ராமு : உங்க மனைவி காணாமல் போனதுக்கு ஏன் குடுகுடுப்புக்காரனுக்கு நூறு ரூபாய் கொடுக்குறீங்க?...
சோமு : அவன்தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஐயா... உங்களுக்கு நல்ல காலம் பொறக்க போகுதுன்னு சொன்னான்.
ராமு : 😹😹
-------------------------------------
சிறந்த வரிகள்...!!
-------------------------------------
ஒவ்வொரு துயரத்தையும், சோகத்தையும், வலியையும் துடைத்துப் போட நமக்கு உதவுவது மன தைரியம்தான். என்னதான் நடந்தாலும் தைரியமாக இருந்து அதை சந்திக்க வேண்டும். மனதை திடமாக வைத்துக் கொண்டு பிரச்சனையை அணுக வேண்டும்.

சோகம் மற்றும் துயரத்தில் இருப்பவர்களிடம் நான் இருக்கிறேன் உனக்கு, இதெல்லாம் என்ன பெரிய பிரச்சனை? தைரியமாக அணுகு, எல்லாம் சரியா போகும் என்று சொல்லுங்கள், அது அவருக்கு ஆயிரம் யானைகளின் அளவிற்கு பலத்தைக் கொடுக்கும்.
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
சிங்கத்தை கண்டு பயப்படாத ஒரு விலங்கு எது தெரியுமா?
.
.
.
.
.
சிங்கம்தான்...😝😝
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழிகாட்டுவான். அவன் யார்?

விடை : கைத்தடி.

2. அடி வாங்கி, அடி வாங்கி ஊருக்கு சேதி சொல்வான். அவன் யார்?

விடை : தண்டோரா.

3. கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையன் ஆவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான். அவன் யார்?

விடை : உளுத்தம் பருப்பு.

4. உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான். அவன் யார்?

விடை : காற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக