இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உயிரினங்களை
படைக்கும் கடவுளான பிரம்மதேவரின் கட்டளைப்படி மகரிஷிகள் பூமியில் மனித இனங்களை பெருக்க
காரணமாக இருந்தார்கள். மனித இனத்தை பெருக்கம் அடைய செய்த ரிஷிகளில் அத்திரி மகரிஷியும்
ஒருவர்.
அத்திரி
ரிஷி மற்றும் அனுசுயா தேவி மும்மூர்த்திகளின் அனுக்கிரகத்தால் மூன்று குழந்தைகளை ஈன்றெடுத்தனர்.
மும்மூர்த்திகளின் அனுக்கிரகத்தால் இந்த பூவுலகில் மூன்று குழந்தைகளும் பிறந்தார்கள்.
அவர்கள்,
1.
சோமன்
2.
துர்வாசன்
3.
தத்தாத்ரேயன்
இவர்களில்
துர்வாசன் வேதங்கள் பலவற்றை கற்று இறைவனிடத்தில் அன்பு கொண்டு மகரிஷி ஆகிவிட்டார்.
தத்தாத்ரேயன் தேவ கணங்களில் இணைந்து விட்டார். சோமன் நவக்கிரங்களில் இணைந்து சந்திரன்
என்று அழைக்கப்படுகிறார்.
இந்த மூவரும் உருவானது எப்படி?
அத்திரி
மகரிஷியும் அனுசுயா தேவியும் தம்பதிகளாக இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். அனுசுயா
தேவியின் பத்தினித் தன்மையை சோதிக்க மும்மூர்த்திகளாகிய சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு
அவர்களின் முனிவர்களாக சென்று யாசகம் கேட்கின்றனர். அத்திரி மகரிஷி தம்பதிகள் மூன்று
முனிவர்களையும் இல்லத்திற்கு வரவேற்று அவர்களை உபசரித்தனர்.
முனிவர்கள்,
தங்களை உபசரிக்கும் முன் ஒரு நிபந்தனை இருக்கின்றது, நிபந்தனையை ஏற்றுக்கொள்வாயின்
நாங்கள் தங்களின் விருந்தை ஏற்றுக் கொள்வோம் என கூறினர். முனிவர்களிடம் நிபந்தனையை
என்னவென்று கேளாமல் தங்களின் நிபந்தனையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என தம்பதியினரும்
உறுதி அளிக்கின்றனர். மகிழ்ந்த மும்மூர்த்திகளும் தங்கள் நிபந்தனை என்னவென்று கூறினார்கள்.
நிபந்தனையை
கேட்ட தம்பதியினர் அதிர்ச்சி மற்றும் திகைப்படைந்து நின்றனர். நிபந்தனை என்னவென்றால்
விருந்தை பரிமாறும்போது தேவி அவர்கள் நிர்வாண கோலத்தில் பரிமாற வேண்டும் என்பதாகும்.
என்ன செய்வதென்று தெரியாமல் கொடுத்த வாக்கினை காப்பாற்ற தம்பதியினரும் விருந்தினை தயார்
செய்கின்றனர்.
விருந்தினை
பரிமாறும் நேரத்தில் அனுசுயா தேவி தன் பத்தினித் தன்மையால் மும்மூர்த்திகளை பச்சிளம்
பாலகர்களாக மாற்றி அவர்கள் சொன்ன நிபந்தனைப்படி அவர்களுக்கு உணவை பரிமாறினார்கள். மும்மூர்த்திகளும்
பச்சிளம் பாலகர்களாக அத்திரி மகரிஷியின் வீட்டில் இருக்கின்றனர் என்பதை நாரத மகரிஷி
மூலம் முப்பெரும் தேவிகளான பார்வதி, சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி அறிந்து கொள்கின்றனர்.
முப்பெரும்
தேவிகளும் அத்திரி மகரிஷியின் தம்பதி முன்னர் தோன்றி வந்து தாங்கள், யார் என்பதை கூறி
அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி தர வேண்டும் என கேட்கின்றனர். இதை அறிந்த தம்பதிகள்
உலகில் உள்ள எல்லா இன்பங்களையும் அனுபவித்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டனர்.
நிகழ்
உலகிற்கு வந்த தம்பதிகள், தேவிகள் கேட்டபடியே மும்மூர்த்திகளை பழைய நிலைக்கு மாற்றிவிட்டனர்.
அவர்கள் பழைய நிலைக்கு வந்தவுடன் முப்பெரும் தேவி மற்றும் மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில்
நிற்கும் கண்கொள்ள காட்சியை கண்டு மெய்மறந்து நின்றனர்.
மும்மூர்த்திகளும்
தங்களின் பழைய நிலையை அடைந்தவுடன் தாங்கள் வந்த நோக்கத்தை அவர்களிடம் கூறினர். அதாவது
தம்பதியினரை சோதித்து அனுசுயா தேவியின் பத்தினித் தன்மையை உலகறிய செய்யவே இந்த திருவிளையாடலை
நடத்தியதாக மும்மூர்த்திகள் கூறினர்.
பட்ட
துன்பங்கள் மறந்து அகம் மகிழ்ந்தனர் தம்பதிகள். மும்மூர்த்திகளும் தாங்கள் மகிழ்ந்ததை
எண்ணி தாங்களுக்கு வேண்டும் வரத்தை கேட்கச் சொன்னார்கள்.
மும்மூர்த்திகள்
கேட்கச் சொன்ன பேரில் தம்பதிகள் தங்களுக்கு புத்திர செல்வம் அருளும் படி வேண்டினர்.
மும்மூர்த்திகளும் அவர்கள் கேட்ட வரத்தை கொடுத்தனர்.
அவர்களின்
அனுகிரகத்தால் அத்திரி ரிஷிக்கும், அனுசுயா தேவி தம்பதியினருக்கும் மூன்று குழந்தைகள்
பிறந்தனர்.
சந்திர பகவான் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத்
தெரியுமா?
நவகிரகங்களில்
சூரியனுக்கு அடுத்தபடியாக வருபவர் சந்திர பகவான். பிறவியிலே சிறந்த பிறவி மானுடப் பிறவி.
அந்த மானுடப் பிறவியில் உடலில் எந்தவித ஊனமும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான தேகத்துடனும்,
தாயின் அன்பு மற்றும் ஆதரவுடனும் வாழ சந்திரனின் அனுகிரகம் முழுமையாக வேண்டும்.
சந்திரனுக்குரிய
மலர் - வெள்ளை அலரி
சந்திரனுக்குரிய
நிறம் - வெள்ளை
சந்திரனின்
வடிவம் - சதுர வடிவம்
சந்திரனின்
ஆதிக்க எண் - 2
சந்திரனுக்குரிய
தானியம் - பச்சரிசி
சந்திரனுக்குரிய
நவரத்தினம் - முத்து
சந்திர பகவானின் இயல்புகள் :
சந்திரன்
சுய ஒளியற்ற கோளம் கொண்டவர்.
சூரியனிடமிருந்து
ஒளியைப் பெற்று பிரதிபலிப்பவர்.
மனிதர்களின்
உடல், மனம், புத்தி மற்றும் தாயார் போன்ற வாழ்க்கைக்கு முக்கியமானவர்களின் காரக கிரகமாக
அமைந்து நம்மை சூழ்ந்துள்ளார்.
சந்திரன்
பூமியை ஒரு மாதத்தில் சுற்றி முடிக்கிறது.
சந்திரன்
உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும், இரத்தத்துக்கும் ஆதிபத்தியம் பெறுகிறார்.
சந்திரனின் செயல்கள் :
சந்திரனின்
செயல்கள் அனைத்தும் இனிமை கொண்டவை.
சந்திரன்
இரவில் நடைபெறும் அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பானவர்.
கலைஞர்களின்
கற்பனை வளர்ச்சிக்கும் காரணமானவர் இவரே.
சந்திரனின் காயத்ரி மந்திரம் :
ஓம்
பத்மத்வஜாய வித்மஹே
ஹேம
ரூபாய தீமஹி
தன்னஸ்
சந்திரஹ் ப்ரசோதயாத்
சிவனின் திருவிளையாடல் களில் சந்திரனின் நிலை பற்றி சொல்லுங்கள்
பதிலளிநீக்கு