Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 செப்டம்பர், 2019

சில்லென்று வீசும் காற்றில்... அமிர்தி பூங்கா...!!

Image result for சில்லென்று வீசும் காற்றில்... அமிர்தி பூங்கா...!!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அமிர்தி பூங்காதான். இந்த பூங்காவில் பல்வேறு வகைப்பட்ட பறவையினங்களும், விலங்கினங்களும் உள்ளன.

 அமிர்தி ஆற்றிற்கு அக்கரையில் ஜவ்வாது மலையடிவாரத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது. 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இப்பூங்காவிற்குள் ஓர் அழகான அருவி காண்போரை கவர்கிறது.

சிறப்புகள் :

 இயற்கை எழிலோடு நான்கு புறமும் ஜவ்வாது மலை உயர்ந்து நிற்க நடுவில் நந்தவனமாய் காட்சி தருவது அமிர்திக் காடு. இதில் ஒரு பகுதி சுற்றுலா இடமாகவும், மறுப்பகுதி பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயமாகவும் காணப்படுகிறது.

 இயற்கைத் தென்றல் அரவணைக்கும் மலைப்பகுதி...

 செழிப்பில் அடர்ந்து வளர்ந்த ஏராளமான மூலிகைச் செடிகளும், சந்தன மரங்களும்...

 மனதை ஒரு நிலைப்படுத்தும் தியான மண்டபம்...

 ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்தப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப் பாம்புகள் உள்ளன.

 அடர்ந்து வளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.

 மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம்.

 தோகை விரித்தாடும் மயில்கள், துள்ளிக் குதித்தோடும் புள்ளிமான்களின் அழகை ரசிப்பதற்காகவே, தினமும் சுற்றுலாப் பயணிகள் அமிர்திக்கு வந்து செல்கிறார்கள்.

 மரத்தடி நிழலில் சிறிதுநேரம் உட்கார்ந்தால், சில்லென்று வீசும் காற்றில் சுட்டெரிக்கும் வெயில்கூட துயில் கொள்ளும். பருவமழைக் காலங்களில் அரியவகை பறவைகள் அமிர்திக்குப் படையெடுத்துவரும்.

பார்ப்பதற்கே கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, பறவைகள் கூடுகட்டி வாழும் இடப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும்.

உணவுக்குக் குறையில்லை. திரும்பிய பக்கமெல்லாம் ஹோட்டல்கள். திருப்தியான சைவ உணவும் கிடைக்கும். மலைகளில் விளையும் தேன், தினை, சாமை போன்ற உணவுப்பொருள்களை விற்கும் கடைகளும் உள்ளன. வீட்டிற்கு தேவையான வித்தியாசமான மரச்சாமான்களும் கிடைக்கின்றன.

எப்படி செல்வது?

வேலூரில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலூரிலிருந்து கணியம்பாடி, கீழ் அரசம்பட்டு, கல்பட்டு வழியாக போகலாம்.

எப்போது செல்லலாம்?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக