Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 14 செப்டம்பர், 2020

மனைவியை காப்பாற்றிய கணவனின் எதிர்பார்ப்பு... என்ன நடந்திருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிப்பதற்கான நேரம்...!
-------------------------------------
ராமு : எங்க வீட்டு நாயை காணோம் சார்...
சோமு : அடையாளம் சொல்லுங்க...
ராமு : அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்!
சோமு : 😨😨
-------------------------------------
டீச்சர் : 'கண்ணகி மதுரையை எரித்தாள்" இது என்ன காலம்?
மாணவர் : 'Fire Service" இல்லாத காலம் டீச்சர்.
டீச்சர் : 😦😦
-------------------------------------
நோயாளி : ஏன் டாக்டர், இதைக் கொடுத்தபோது சுகர் மாத்திரைன்னுதானே சொன்னீங்க?...
டாக்டர் : ஆமா.. சொன்னேன்.. அதுக்கென்ன இப்போ?...
நோயாளி : இல்ல டாக்டர்.. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு பாத்தேன்.. இனிப்பாவே இல்லையே.. கசந்துச்சே.. அதான் வந்தேன்.
டாக்டர் : 😩😩
-------------------------------------
குட்டிக்கதை...!
-------------------------------------
புதியதாக திருமணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர். திடீரென ஒரு நாய் குரைத்துக்கொண்டு ஓடி வந்தது.

தங்கள் இருவரையும் கடிக்கப் போகிறது என தம்பதிகள் நினைத்தார்கள்.

ஆனால் நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி கொண்டார். நாய் கடித்தால் தன்னை மட்டும் கடிக்கட்டும். தன் மனைவி தப்பி விடுவாள் என நினைத்தார்.

ஓடிவந்த நாய் திரும்பி சென்றது. பிறகு மனைவியை இறக்கி விட்டார்.

தன்னுடைய நற்செயலுக்காக மனைவி பாராட்டுவாள் என எதிர்பார்த்தார்.

அடுத்த கணமே மனைவி கோபமாக, எல்லோரும் நாய் வந்தால் கல்லைத் தூக்கி எறிவார்கள். ஆனால் தன் மனைவியையே தூக்கி எறியும் கணவனை இப்போதுதான் நான் பார்க்கிறேன் என்றாள்.
-------------------------------------
முத்தான பொன்மொழிகள்...!
-------------------------------------
⚡ அறிவு உங்களுக்கு அதிகாரத்தை கொடுக்கும்... ஆனால், குணம்தான் மரியாதையை பெற்றுத் தரும்.

⚡ மனிதர்கள் அவர்களுடைய கடமையை மறக்கப் பழகியிருக்கிறார்கள். ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்.
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
-------------------------------------
விளக்கம் :
-------------------------------------
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக