இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆங்கில பெயர்ச்சொற்குறிகளில், பொதுவாக
"ஒரு", "ஓர்" என்பதைக் குறிக்க " a",
"an" எனும் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் பயன்படுகின்றன. இவற்றில்
"a" பயன்படும் இடங்கள் எவை, "an" பயன்படும் இடங்கள் எவை என்பதை
இன்று பார்ப்போம்.
பொதுவாக மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொல்லுக்கு முன்னால் "a" பயன்படுத்தப்படுகின்றது.
ஆங்கில மெய்யெழுத்துக்கள் (consonants) 21 ஆகும்.
b c d f g h j k l m n p q r s t v w x y z = 21
உதாரணமாக:
I am a Sri Lankan
நான் ஒரு இலங்கையன்.
I am a student.
நான் ஒரு மாணவன்.
This is a car
இது ஒரு மகிழுந்து.
This is a book.
இது ஒரு புத்தகம்.
He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.
பொதுவாக உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு முன்னால் "ஓர்", "ஒரு" என்பதைக் குறிக்க "an" பயன்படுகின்றது.
ஆங்கில உயிரெழுத்துக்கள் (Vowels) 5 ஆகும். இவ்வெழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு முன்னால் பொதுவாக "an" பயன்படும்.
a e i o u = 5
உதாரணமாக:
This is an animal - (animal begins with a vowel sound)
இது ஒரு மிருகம்.
I am an Indian
நான் ஒரு இந்தியன்.
I am an English teacher
நான் ஒரு ஆங்கில அசிரியர்.
He is an old man
அவர் ஒரு வயதான(வர்) மனிதர்.
ஒலிப்பு வேறுபாட்டை விளங்கிக்கொள்ளல்

மேற்
கூறிய விதிமுறைகள் மாறுப்படும் இடங்களும் உள்ளன. ஏன் மாறுபடுகின்றன என்பதனை கீழே வழங்கப்பட்டுள்ள
விளக்கங்கள் ஊடாகப் பாருங்கள்.
உயிர் எழுத்துக்களான a, e, i, o, u போன்ற சொற்கள் முன்னால் வந்தாலும் ‘a’ பயன்படும் இடங்களும் உள்ளன.
a user - "யூசர்" எனும் சொல்லின் முதலெழுத்து (u) உயிரெழுத்தாக இருந்தாலும், அது "உ” எனும் உயிரொலியாக அல்லாமல் “யு” எனும் மெய்யொலியாகவே ஒலிக்கப்படும். அதனாலேயே ‘a’ பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். (sounds like 'yoo-zer,' i.e. begins with a consonant 'y' sound, so 'a' is used)
a university - இதன் ஒலிப்பும் "உ” எனும் உயிரொலியாக அல்லாமல் “யு” எனும் மெய்யொலியாக ஒலிப்பதனாலேயே ‘a’ பயன்படுத்தப்படுகிறது
a European country – இதிலும் ‘இ’ எனும் உயிரொலியாக அல்லாமல் "யு’ எனும் மெய்யொலியாக ஒலிப்பதே "a" இடப்பட்டுள்ளதற்கான காரணம். (sounds like 'yer-o-pi-an,' i.e. begins with consonant 'y' sound)
மெய் எழுத்து முன்னால் வந்தாலும் ‘an’ பயன்படும் இடங்கள்.
an hour - என்பதில் “hour” என்பது “our” போல் “அ” உயிரொலியாக ஒலிப்பதால் “an” பயன்படுத்தப்படுகிறது. (sounds like 'a-our,' begins with vowels 'a' sound)
an honor - இதுவும் “honor” என்பது “onor” போல் “அ” உயிரொலியாக ஒலிப்பதால் “an” பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றை சரியாக கவனித்தீர்களானால், உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்கள் மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்கள் என்று பார்க்காமல், உயிரொலி ஒலிப்புச் சொற்கள், மெய்யொலசொலிப்புச் சொற்கள் எனும் அடிப்படையில், சொற்களின் ஒலிப்புக்கு அமைவாகவே, நிச்சயற்ற பெயர்ச்சொற்குறிகள் இடம்பெறுகின்றன என்பதை எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.
இந்த நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகளின் பயன்பாடுகளின் பொழுது ஆங்கிலேயர்களும் பிழை விட்டுவிடும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் இவற்றை நாம் முறையாக விளங்கிக் கற்பது எமக்கே பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் இந்த வலைத்தளத்திற்கு
புதிதாக வருகை தந்தவரானால், உங்கள் ஆங்கிலப் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே
தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.
பின் இலக்க வரிசை கிரமத்தில் ஏனையப் பாடங்களை தொடரலாம். அதுவே இந்த ஆங்கிலப் பயிற்சி
நெறியை தொடர எளிதானதாக இருக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக