Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஏப்ரல், 2020

6-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

சூரியன், சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். செவ்வாய் கிரகம் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும் காரண கர்த்தா.

செவ்வாய்க்கு சூரியன், சந்திரன், குரு நட்பு கிரகங்களாகும். சுக்கிரன், சனி சமம். புதன், ராகு, கேது பகையாகும்.

லக்னத்திற்கு 6-ம் இடத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு நிலமும், பொருளும் விரயமாகும்.

6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

👉 மனதில் பயமே இருக்காது.

👉 அரசியலில் ஈடுபாடு உடையவர்கள்.

👉 ஆரோக்கிய குறைபாடுகளை கொண்டவர்கள்.

👉 எதிரிகளால் இன்னல்கள் ஏற்படும்.

👉 குருதி தொடர்பான நோய் உண்டாகுதல்.

👉 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

👉 மனைசேர்க்கை கொண்டவர்கள்.

👉 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்படக்கூடியவர்கள்.

👉 பொதுமக்கள் தொடர்பான காரியங்களில் வெற்றி உடையவர்கள்.

👉 உறவினர்களை விடுத்து வெளிவட்டராங்களில் செல்வாக்கு உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக