Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஏப்ரல், 2020

3-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

சந்திரனுக்கும், மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களுக்கு மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார்.

சுகங்கள், துக்கங்கள், கோபங்கள், தாபங்கள், உடன்பாடுகள், முரண்பாடுகள், ஒட்டுதல்கள், விரிசல்கள், பிடிவாதங்கள், விட்டுக்கொடுத்தல்கள், சுயநலங்கள், தியாகங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், நம்பிக்கைகள், துரோகங்கள், காதல், காமம், மன நெகிழ்ச்சிகள், மன எரிச்சல்கள், புளங்காகிதங்கள், பூசல்கள் போன்றவைகளுக்கு சந்திரன் காரகன்.

ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்தால் மேற்கூறியவற்றில் குளிர வைக்கும் அதிர்வுகளையே ஜாதகர் அதிகமாக சந்திப்பார். இல்லையென்றால் போராட்டம்தான்.

வெற்றி கொள்ளும் சந்திரன் லக்னத்தில் 3-ம் இடத்தில் தனித்து நின்றால் அந்த ஜாதக்காரர்களுக்கு பெரும் செல்வம் கிட்டும்.

3ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

👉 வாகன வசதி கிடைக்கும்.

👉 நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

👉 அடிக்கடி குறுகிய பயணங்களை மேற்கொள்வார்கள்.

👉 தேவையற்ற அலைச்சல்களை உடையவர்கள்.

👉 மாறும் பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்.

👉 வாழ்க்கை துணைக்கு கட்டுப்படக்கூடியவர்கள்.

👉 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

👉 எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்கள்.

👉 உடல் வலிமையையும், ஆற்றலையும் உடையவர்கள்.

👉 நாஸ்திக எண்ணமும், ஆன்மிக எண்ணமும் மாறி மாறி தோன்றும்.

👉 சில நேரங்களில் அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும்.

👉 சகோதர, சகோதரிகளின் மீது அன்பு கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக