பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தளத்தில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
அதேபோல் இந்த இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள் என பல வசதிகள் இருப்பதால் பிரபலங்கள் பலர் இதை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பேஸ்புக் பயன்படுத்தாத பிரபலங்கள் கூட இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பார்கள்.
லைவ் ரூம் எனும் ஆப்ஷன்
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் லைவ் ரூம் எனும் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுவரை இரண்டு பேர் மட்டுமே ஒரு நேரத்தில் நேரலையில் இணைந்திருக்க முடியும். ஆனால் தற்போது 4 பேர் வரை ஒரே நேரலையில் இணைந்திருக்கும் வகையில் அப்டேட் கொண்டுள்ளது.
நான்கு பேர் வரையில் நேரலை
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் நிறுவனம், நான்கு பேர் வரையில் நேரலையில் ஒரே நேரத்தில் இணைந்திருக்க முடியும் என்பது சிறப்பான ஒன்று தான். பின்பு இதன் மூலம் கேள்வி பதில்கள் நடத்தலாம், நண்பர்களுடன் உரையாடலாம், இசை தொடர்பாக நிகழ்ச்சிகளை நடத்தலாம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு இந்த லைவ் ரூம்ஸ் அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இன்ஸ்டாகிராம் கூறி வந்த நிலையில், தற்சமயம் இந்த அப்டேட் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் டிக்டாக் செயலி இல்லை என்பதால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்வசதியை மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக