Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 6 அக்டோபர், 2020

கடக ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். இருப்பினும் சந்திரனுடன் செவ்வாய் நட்பு கொண்டாலும் கடக ராசியில் தனது பலம் முழுவதையும் இழக்காமல் நீச்சம் அடைகின்றார். அதனால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

 

 பூர்வீக சொத்துகளால் ஆதாயம் உண்டாகும்.

 

 புத்திரர்களால் ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டாகும். 

 

 ஆண் வாரிசுகளை காட்டிலும், பெண் வாரிசுகள் மிகுந்த அன்பு கொண்டவர்கள். 

 

 இறைவன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். 

 

 பிறருக்கு உதவும் மனவலிமை கொண்டவர்கள். 

 

 நல்ல குணங்கள் இருந்தாலும் சிறிது கோபமும், அலட்சிய குணமும் கொண்டவராக இருப்பார்கள்.

 

 அறிவுக்கூர்மையும், புத்திசாலித்தனமும் கொண்டவர்கள்.

 

 சம்பாதிப்பதில் வல்லமை உடையவர்கள்.

 

 எவரும் அறியாத ரகசிய செயல்பாடுகளை உடையவர்கள்.

 

 மனைவியின் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர்கள்.

 

 வெளியூர் பயணங்கள் மீது அலாதி பிரியம் உடையவர்கள்.

 

பிரபலமானவர்களின் தொடர்பு மற்றும் அரசு அதிகாரிகளினால் ஆதாயம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!