Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 டிசம்பர், 2020

கிட்ட இருக்கும் பட்டணத்தை எட்டி பார்க்க முடியவில்லை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-----------------------------------------------

மேனேஜர் : நேத்து ஏன் லீவு?

ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்.

மேனேஜர் : 😖😖

-----------------------------------------------

டாக்டர் : இது உங்கள் மகனின் உயிர் பிரச்சனை, கண்டிப்பா இந்த ஆபரேஷன் செய்தே ஆகணும்.

குமார் : அதனாலதான் அவன் நேத்தே எங்கேயோ ஓடிட்டான் !!

டாக்டர் : 😳😳

-----------------------------------------------

அர்த்தங்கள் அறிவோம்...!!

-----------------------------------------------

பாவனத்துவனி - சங்கு.

முன்றுறை - துறைமுகம்.

முரண்டல் - பகைத்தல்.

புயங்கன் - பாம்பு.

பாவல் - மிதியடி.

-----------------------------------------------

விடுகதைகள்...!!

-----------------------------------------------

1. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல, உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை, துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல. அது என்ன? 

2. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு. அது என்ன? 

3. நான் இருந்ததில்லை, ஆனாலும் இருப்பவனாக இருப்பேன். என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன். என்னை நம்பியே இந்த உலகமும், மக்களும் நல்லது நடக்குமென எண்ணுகிறார்கள். நான் யார்? 

4. கிட்ட இருக்கும் பட்டணம் எட்டித்தான் பார்க்க முடியவில்லை. அது என்ன? 

5. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான். அவன் யார்? 

விடைகள் :

1. தலையணை 

2. நண்டு 

3. நாளை 

4. முதுகு

5. பனம்பழம்

-----------------------------------------------

கலைந்த சொற்களை சீர்படுத்துக...!!

-----------------------------------------------

ட் ச டை அ ச் ரை

கு றா ப றை ற் க்

வா ம் சி தே ய த

ய ம் கி க் வ மு து த்

த் தா ந் த சி ம்

விடைகள் :

அரைச்சட்டை

பற்றாக்குறை

தேசியவாதம்

முக்கியத்துவம்

சித்தாந்தம்

-----------------------------------------------

ஓரெழுத்து ஒரு மொழி...!!

-----------------------------------------------

யா - அகலம், மரம், வினா, ஐயம்

வா - அழைத்தல்

வீ - பறவை, பூ, அழகு

வை - வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வெள - கௌவுதல், கொள்ளை அடித்தல்

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக