வியாழன், 27 ஆகஸ்ட், 2020

வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான். அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிப்பதற்கான நேரம்...!!
-------------------------------------
பாபு : அந்த புரோக்கர்தாங்க எங்க 5 பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சாரு?
குமார் : அப்படியா? அவருக்கு என்ன கொடுத்தீங்க?
பாபு : என் ஆறாவது பொண்ண அவருக்குத்தான் கொடுத்தேன்..
குமார் : 😝😝
-------------------------------------
சீனு : நேத்து எங்க வீட்டுல திருடன் வந்து எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு போயிட்டான்...
ராஜ் : நீங்கதான் துப்பாக்கி வெச்சிருக்கீங்களே...
சீனு : நல்ல வேளை.. அத டிராவுல வெச்சி பூட்டி வெச்சிருந்தேன்... இல்லைன்னா அதையும் எடுத்துக்கிட்டு போயிருப்பான்...
ராஜ் : 😂😂
-------------------------------------
டாக்டர் : நர்ஸ்... அந்த மூணாம் நம்பர் நோயாளிக்கு Bp இருக்கா?
நர்ஸ் : இல்ல டாக்டர்...
டாக்டர் : சுகர் இருக்கா?
நர்ஸ் : இல்ல டாக்டர்...
டாக்டர் : பல்ஸ் இருக்கா?
நர்ஸ் : இல்ல டாக்டர்...
டாக்டர் : ஏன்?
நர்ஸ் : ஏன்னா அவனுக்கு உயிரே இல்ல டாக்டர்..
டாக்டர் : 😳😳
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான். அவன் யார்?

2. நனைந்தாலும் நடுங்க மாட்டான். அவன் யார்?

3. அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்?

4. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான். அவன் யார்?

5. எட்டுக்கால் ஊன்றி இடமும், வலமுமாக வருவான். அவன் யார்?
-------------------------------------
விடைகள்...:
-------------------------------------

1. பந்து.

2. குடை.

3. புகை.

4. மோதிரம்.

5. நண்டு.
-------------------------------------
பொன்மொழிகள்...!!
-------------------------------------
🔅 இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம்.

🔅 குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.

🔅 வாழ்க்கை என்பது இறக்கும் வரை அல்ல... பிறர் மனதில் வாழும் வரை.

🔅 அன்புதான் உனது பலவீனம் என்றால்... அதுவே உனது ஆற்றல்.

🔅 தண்டனை தர தாமதி. மன்னிக்க மறு சிந்தனை வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்