Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 25 ஜூன், 2020

10-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

உலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்கும், அமோகமான வாழ்விற்கும் சுக்கிரன்தான் காரணமாகிறார். சுக்கிரனின் வாகனம் கருடன் ஆகும். சுக்கிரன் கலைக்கு காரகனாக விளங்குகிறார்.

இல்லற சுகத்தை தருபவரும் அவரே. சுக்கிர திசை நடக்கும்போது தீயக்கோள்களின் பார்வைப்பட்டாலோ, தீயச் சேர்க்கை ஏற்பட்டாலோ கெடுதியான பலன்களே உண்டாகும். இதனையே சுக்கிர தோஷம் என்பார்கள். சுக்கிரனால் கண்நோய், பால்வினை நோய்கள், சிறுநீரக நோய்கள் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கஞ்சனூர் சென்று நீல நிற ஆடை அணிந்து, வெண்தாமரை மலர்களால் சுக்கிர பகவானை பிரார்த்திக்க வேண்டும். இதனால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும்.

லக்னத்திற்கு 10-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு கூட்டுத்தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.

10-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

👉 நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள்.

👉 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

👉 கூட்டுத்தொழிலின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

👉 எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

👉 எப்போதும் ஏதாவது எண்ணங்களுடன் இருப்பார்கள்.

👉 கலைகள் கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

👉 ஆடை, ஆபரணங்கள் சார்ந்த பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும்.

👉 வாகனம் தொடர்பான தொழிலின் மூலம் நற்பலன் உண்டாகும்.

👉 வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக