Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 25 ஜூன், 2020

YouTube பற்றி நீங்கள் அறியாத 'பகிரங்க' உண்மைகள்! கூகிள் யாரிடமிருந்து யூடியூபை வாங்கியது தெரியுமா?

உலகின் மிகப்பெரிய வீடியோ ஷேர் சேவை தளமான ஒரே தளம் யூடியூப் மட்டும் தான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், நீங்கள் தினமும் பயன்படுத்தும் YouTube பற்றியான சில பகிரங்க உண்மைகள் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். இதுவரை உங்களுக்கு YouTube பற்றித் தெரியாத சில சுவாரசியமான விஷயங்களை இந்த பதிவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.



யூடியூப் தளத்தை பற்றி நாம் அறியாத தகவல்கள்



நம்மில் பெரும்பாலோர் யூடியூப் தளத்தை அவர்-அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வலைத்தளம் அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாடு மூலம் தினசரி இந்த வீடியோ சேவையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அடிப்படையில் இதைப் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தினாலும் கூட, யூடியூப் தளத்தில் நாம் புதிதாகக் கற்றுக்கொள்ள ஏராளமான பயனுள்ள தகவல்களும் உள்ளது.


சுவாரசியமான பகிரங்க உண்மைகள்


அதேபோல், யூடியூப் பற்றி நாம் அறியாத பல உண்மைகளும் இருக்கிறது. அதில் சில சுவாரசியமான பகிரங்க உண்மைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். இறுதிவரை ஸ்கிப் செய்யாமல் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். யூடியூப் பற்றிய உண்மைகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். யூடியூப் பற்றி நீங்கள் அறியாத உண்மைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம்.


காதலர் தினத்தில் உதயமானதா YouTube

YouTube வலைத்தளம் பிப்ரவரி 14, 2005 ஆம் ஆண்டு காதலர் தினத்தின்போது மூன்று முன்னாள் PayPal ஊழியர்களால் நிறுவப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே இது முற்றிலுமான ஒரு கூகிள் தயாரிப்பு இல்லை என்பதே உண்மை.

eBay நிறுவனம் PayPal நிறுவனத்தை வாங்கியபோது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 'போனஸ்' தொகையின் மூலம் தான் முதல் முதலில் யூடியூப் நிதியளிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.

டேட்டிங் தளமாக செயல்பட்ட யூடியூப் உண்மையா?

ஏப்ரல் 23, 2005 அன்று தான் யூடியூப் தளத்தில் முதல் யூடியூப் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் வீடியோ யூடியூப் நிறுவனத்தின் இணை நிறுவனர் சான் டியாகோ ஜூவின் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் யூடியூப் வீடியோ தளம் ஒரு 'டேட்டிங்' தளமாக செயல்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். 'டியூன் இன் ஹூக் அப் (Tune In Hook Up)' என்ற பெயரில் வீடியோ டேட்டிங் தளமாக YouTube செயல்பட்டது என்பது தான் உண்மை.

பிரபலமான எப்படி முத்தமிடுவது வீடியோ

யூடியூப் நிறுவப்பட்ட 18 மாதங்களுக்குப் பிறகு, அதன் முன்னேற்றத்தைக் கண்ட கூகிள் நிறுவனம், அதை 1.65 பில்லியன் டாலர் ஸ்டாக் என்ற விலையில் யூடியூப் வீடியோ தளத்தை வாங்கியது. கூகிள், யூடியூப் வீடியோ தளத்தை உருவாகவில்லை என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

யூடியூப்பில் அதிகம் தேடப்படும் மிகவும் பிரபலமான தேடல் 'எப்படி முத்தமிடுவது' என்பது தான், டுடோரியலுக்காக அதிகம் தேடப்பட்ட இரண்டாவது தேடல் 'டை எப்படி கட்டுவது' என்பதாகும். அதிகம் தேடப்பட்ட பிரிவு 'இசை' தான்.


44 வினாடி வீடியோவிற்காக 5 மாத தடை

2013 ஆம் ஆண்டின் ஆய்வின் அடிப்படையில், அதிகம் பார்க்கப்பட்ட 1,000 YouTube வீடியோக்களில் 60% வீடியோக்கள் ஜெர்மனியில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. அதேபோல், தாய்லாந்த் மன்னர் பற்றிய 44 வினாடி வீடியோவிற்காக அந்த நாட்டில் 2007 ஆம் ஆண்டில் யூடியூப் 5 மாத காலம் தடை செய்யப்பட்டுள்ளது

மிகவும் நீளமான வீடியோ


யூடியூப்பில் உள்ள மிகவும் நீளமான வீடியோ 571 மணி நேரம், 1 நிமிடம், 41 வினாடிகள் நீளமானது. இது 23 நாட்கள் மற்றும் 19 மணி நேரங்களுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நீளமான வீடியோ யூடியூப்பில் உள்ளது என்பது ஒரு நம்பமுடியாத உண்மை.

ஆட்டோமேட்டட் கன்டென்ட் ஐடி (Automated Content ID) என்று அழைக்கப்படும் தானியங்கும் பதிப்புரிமை மீறலை ஸ்கேன் செய்ய யூடியூப் ஒரு திட்டத்தை வைத்துள்ளது. இந்த ஸ்கேனர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான வீடியோக்களை ஸ்கேன் செய்கிறது என்பது யாருக்கும் தெரியாத உண்மை.

100 மில்லியன் டாலர் சம்பாதித்த யூடியூப் பூனை

யூடியூப் மூலம் அதிக பணம் பணம் சம்பாதித்தவர் என்ற பெருமையை, பிரபல யூடியூப் நட்சத்திரமான க்ரம்பி கேட் என்ற பூனை பெற்றுள்ளது. இந்த பூனை சுமார் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளது என்பதே உண்மை.

யூடியூப்பில் மிகப் பழமையான வீடியோ எது என்று பார்த்தால், அது 1894 ஆம் ஆண்டிற்கு முன்பு எடுக்கப்பட்ட இரண்டு பூனைகளின் குத்துச்சண்டை வீடியோ என்பதே உண்மை.

இலவச உற்பத்தி இடத்தை வழங்கிய யூடியூப்

யூடியூப்பில் ஒரு பில்லியினுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர் என்பதே உண்மை, இது இணையத்தில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

யூடியூப் ஒரு இலவச உற்பத்தி இடத்தையும் லாஸ் ஏஞ்சல்ஸில் திறந்தது, இந்த இலவச உற்பத்தி இடத்தை பயன்படுத்த உங்களிடம் குறைந்தது 10,000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாய விதியையும் யூடியூப் விதித்திருந்தது என்பதே உண்மை.

ஒரு நிமிடத்தில் இத்தனை வீடியோவா?

யூடியூப்பில் ஒவ்வொரு நிமிடமும், சுமார் 100 மணி நேரத்திற்கும் அதிகமான வீடியோ YouTube இல் பதிவேற்றப்படுகிறது.

கூகிள் சர்ச் நிச்சயமாக, உலகின் மிகப்பெரிய தேடுபொறி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு பின்னால் அடுத்த மிகப்பெரிய இடத்தை யூடியூப் தான் பிடித்துள்ளது. மற்ற பெரிய சர்ச் தளங்களான பிங், யாகூ போன்றவற்றை விட அதிக அளவு பயனர்களை யூடியூப் மட்டுமே கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றி பிராங்க் செய்யும் யூடியூப்

யூடியூப் ஆண்டு தோறும் செய்யும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் முட்டாள்கள் தினத்தின் போது, யூடியூப் அதன் மில்லியன் கணக்கான பயனர்களை ஏமாற்றி பிராங்க் செய்து நகைச்சுவையாகக் கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

யூடியூபர்கள் ஒவ்வொரு மாதமும், மாதத்திற்கு 6 பில்லியன் மணிநேர வீடியோக்களை பார்வையிடுகிறார்கள். அதேபோல், ஒவ்வொரு நாளும் சுமார் 4 பில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை பயனர்கள் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

சவுதி அரேபியாவிலில் டிவிக்கு தடை! ஆனால் யூடியூப்பிற்கு?

YouTube இன் அதிக யூசர் வியூஸ், அதாவது பார்வையாளர்கள் சவுதி அரேபியாவிலிருந்து வருகின்றது. ஏனென்றால் சவூதி அரேபியாவில் டிவி, பேஸ்புக் மற்றும் டிவிட்டர் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் யூடியூப் மட்டும் அங்குக் கட்டுப்பாடில்லை என்பதே உண்மை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக