மகாராஷ்டிராவில் இனி ஊரடங்கு கிடையாது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தளர்வாக அளிக்கப்பட்டது.
இன்னும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கிலிருந்து முழுமையாகத் தளர்வு வழங்கப்படவில்லை. ஆனால் மகாராஷ்டிரா முதல்வர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், “மகாராஷ்டிராவில் இனி ஊரடங்கு கிடையாது. ஆனால் அடுத்த 6 மாதங்களுக்குப் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இனி வரும் காலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய முழு ஊரடங்கு போன்றவையும் மகாராஷ்டிராவில் இருக்காது” என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலவரத்தின் படி மகாராஷ்டிராவில் 62,218 நபர்கள் கோவிட்-19 எதிரான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக