Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 28 செப்டம்பர், 2020

வாழ்க்கை... இப்படி இருந்திருந்தால்... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------
  சிரிக்கலாம் வாங்க...! 

----------------------------------------------

ஆசிரியர் : ஏன்டா இங்க ஒரு பொண்ணு 98 மார்க் எடுத்துட்டு அழுவுது... நீ என்னடானா 13 மார்க் எடுத்துட்டு சந்தோஷமா சிரிக்கிற?
மாணவன் : சார் நான் இந்த 13 மார்க்கையே எப்படி எடுத்தேன்னு தெரியல?...
ஆசிரியர் : 😩😩

----------------------------------------------
    வாழ்க்கை...!!

----------------------------------------------

💪 தவிர்க்க முடியாத சில 'இழப்புகள்"...

💪 வெளிப்படுத்த முடியாமல் சில 'உண்மைகள்"...

💪 நம்ப முடியாமல் சில 'துன்பங்கள்"...

💪 அனுபவிக்க முடியாமல் சில 'சந்தோஷங்கள்"...

💪 இவைகள் நிறைந்தது தான் 'வாழ்க்கை"...!

----------------------------------------------
  இப்படி இருந்திருந்தால்...!!

----------------------------------------------

👶 நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...!!

👶 பொய் சொல்ல வேண்டியதில்லை...

👶 எதிர்பார்த்து ஏமாற வேண்டியதில்லை...

👶 வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை...

👶 கவலையால் தூக்கம் கெட வேண்டியதில்லை...

👶 முகத்திற்கு முன் சிரித்துப்பேசி, முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை...

👶 ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டியதில்லை...

----------------------------------------------
       விடுகதைகள்...!!

----------------------------------------------

1. சிவப்பு பைக்குள் சில்லறைகள். அது என்ன?

விடை : மிளகாய்.

2. உலகமெங்கும் சுற்றும் அவனை ஒருவரும் கண்டதில்லை. அவன் யார்?

விடை : காற்று.

3. ஆரவாரம் இல்லாமல் அணிவகுப்பு, ஓயாது அவர்கள் உழைப்பு. யார் அவர்கள்?

விடை : எறும்புக் கூட்டம்.

4. கோழிபோல் உருவம், குதிரைபோல் ஓட்டம். அது என்ன?

விடை : நெருப்புக் கோழி.

5. உயரப் பறக்கும், ஆனால் ஊரைச் சுற்றிக் கொண்டு பறக்காது. அது என்ன?

விடை : கொடி.

----------------------------------------------
குறளும்... பொருளும்...!!

----------------------------------------------

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

விளக்கம் :

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக