------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!
------------------------------------------------
ராமு : டாக்டர் நீங்க பல் எடுப்பீங்களா?
டாக்டர் : எடுப்பேன் ஒரு பல்லுக்கு 100 ரூபாய்.
ராமு : அப்போ இந்த கவர்ல 4 பல்லு இருக்கு எடுத்துக்கிட்டு 400 ரூபாய் கொடுங்க...
டாக்டர் : 😩😩
------------------------------------------------
ஆசிரியர் : ராமாயணத்தில் வில்லை உடைத்து யார்?
(மாணவன் அழுகிறான்)
ஆசிரியர் : ஏன்டா அழுவுற?... நான் பாடத்துல இருந்து தான கேள்வி கேக்குறேன்.
மாணவன் : சார் சத்தியமா நான் இல்ல சார்.
ஆசிரியர் : 😨😨
------------------------------------------------
கணக்கு ஆசிரியர் : அறிவ பெருக்குங்கடா... அப்ப தான் வாழ்க்கையில முன்னுக்கு வர
முடியும்.
மாணவன் : சார் அறிவ பெருக்க சொல்றீங்க... அத எத்தனையால பெருக்கனும்னு சொல்லவே இல்லையே?...
கணக்கு ஆசிரியர் : 😱😱
------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
------------------------------------------------
எது தானம்? - யாரிடமும் எதையும் கேட்காதிருப்பது.
யார் நண்பன்? - நம்மை பாவம் செய்யாமல் தடுப்பவன்.
எது வாக்கியத்திற்கு அலங்காரம்? - சத்தியமான வார்த்தைகள்.
மின்னல் போல் தோன்றி மறைவது எது? - தீயவர் நட்பு.
மனிதனுக்கு பாக்கியம் எது? - ஆரோக்கியமான வாழ்க்கை.
கஷ்டமான காரியம் எது? - மனதை அடக்கி வைப்பது.
------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
------------------------------------------------
வாழ்க்கையில் அதிசயங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால், உங்களுக்கான
அதிசயம் உங்கள் முயற்சியால் உருவாகும். உங்கள் வாழ்க்கையை செதுக்கும் சிற்பி
நீங்கள்தான்.
துன்பங்கள் உங்களை வந்து சேரும்போது எப்போதும் ஒவ்வொரு துன்பத்திலும் உங்களுக்கான
வெற்றிக்கான விதையை விதையுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக