Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 டிசம்பர், 2020

நெற்றியில் பட்டை போடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

நெற்றியில் பட்டை போடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, "சிவசிவ' "முருகா' என்று மந்திரம் ஜெபித்தபடியே பூசவேண்டும்.

இறைவழிபாடு என்பது இந்துக்களின் (Hinduism) பிரிக்க முடியாத வழக்கம் ஆகும். நாம் தினசரி கோவிலுக்கு (Temple) செல்கிறோமோ இல்லையோ வீட்டிலாவது இறைவனின் உருவ படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம். 

'நீறில்லா நெற்றி பாழ்' என்கிறாள் அவ்வைப்பாட்டி. "மந்திரமாவது நீறு' என்று திருநீற்றின் (Vibhuti) மந்திரத்தன்மையைப் போற்றுகிறார் ஞானசம்பந்தர். திருநீறு நிறைய பூசிய நெற்றியை உடையவர் பக்திப்பழமாய் அழகாக இருப்பர். நாம் வீட்டில் பூஜை செய்யும் போதும் சரி, கோவிலுக்கு சென்றாலும் சரி, நமக்கு இறைவழிபாட்டிற்கு பின்னர் பிரசாதமாக விபூதி கொடுப்பார்கள். விபூதி என்பது இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒன்று.

இதை, பசுமாட்டின் சாணத்தை எடுத்து, உலரவிட்டு பின்னர் உமியினால் மூடி புடம் போட்டு எடுப்பர். பசுவின் சானத்தில் இருந்து வேதிப்பொருட்கள் ஏதும் சேர்க்கப்படாமல் கிடைக்கப்பெறும் இந்த விபூதிக்கு மகத்துவமும் அதிகம். இதனால் தான் அனைத்து கோவில்களிலும் பிரசாதமாக விபூதி வழங்க படுகிறது. 

விபூதிக்கு வேறு பெயர்....! 

> திருநீறு என்ற மற்றொரு பெயர் உண்டு. 

திருநீறு என்பதம் பொருள்....! 

> திருநீறுக்கு "மேலான செல்வம்' என்பது பொருள்.

திருநீறு பூசுவதன் காரணம்...! 

குளித்தவுடன் தலையில் இருக்கும் நீரைப் போக்கி தலைவலி, ஜலதோஷத்தை தடுக்கும் தன்மை விபூதிக்கு உண்டு. 

சரி உங்களுக்கு விபூதி எந்த திசையில் நின்று பூச வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?...! தெரியாதா?. பரவா இல்லை அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்...! 

விபூதி பூசக்கூடிய திசை...! 

கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி நின்று திருநீறு பூசுவது உசிதம். காலை, மாலை, சாப்பாட்டிற்கு முன், கோயிலுக்குச் செல்லும்நேரங்களில் விபூதி பூசுவது அவசியம். 

கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, "சிவசிவ' "முருகா' என்று மந்திரம் ஜெபித்தபடியே பூசவேண்டும். "நீறு நிறைஞ்சிருந்தா நெற்றிக்கழகு' என்பதை இளையதலைமுறையினர் உணர்வது அவசியம்.

வீபூதி .... மூன்று கோடுகளின் மகிமை ..!!

முதல் கோடு ......

அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.

இரண்டாவது கோடு .......

உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.

மூன்றாவது கோடு ........

மகாரம், ஆஹவனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக