இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Contact us : oorkodangi@gmail.com
நகச்சுற்றை கனவில் கண்டால் கணவன்-மனைவி இடையே
ஒற்றுமை அதிகரிக்கும்.
நகைப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் வீண்
செலவுகள் ஏற்பட்டு வறுமை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
நகரா
(இசைக்கருவி) சத்தத்தை கேட்பது போல் கனவு கண்டால், ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு
அதில் வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
நடனம்
ஆடும் மங்கையை கனவில் கண்டால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.
நண்டை
கனவில் கண்டால் கடன்களால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
நட்சத்திரத்தை பிரகாசமாக கனவில் கண்டால்
புத்திரபேறு உண்டாவதைக் குறிக்கிறது.
நரியை
கனவில் கண்டால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
நவதானியங்களை கனவில் கண்டால் ஆயுள் விருத்தி
உண்டாகும்.
நாகதாளி(சப்பாத்திக்கள்ளி) அழிவதாகக் கனவில்
கண்டால் பகைவர்களின் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கும்.
நாகம்
விரைந்து செல்வதாக கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
நாடியில்(நரம்பு) ரத்தம் வருவது போல் கனவு
கண்டால் நஷ்டம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
நாட்டியக் கச்சேரியில் பங்கேற்பது போல் கனவு
கண்டால் சேமிப்பு மேலும் உயரும் என்பதைக் குறிக்கிறது.
நாடோடியைக் கனவில் கண்டால் எதிர்பாராத
சங்கடங்கள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
நிச்சய
தாம்பூலத்தை கனவில் கண்டால் திருமணத்திற்கு வரன் அமையும் என்பதைக் குறிக்கும்.
நிலமகள்(பூமிதேவி) படத்தை கண்டால் வெளிநாட்டு
பயணங்களில் இருந்த தடைகள் விலகும் என்பதைக் குறிக்கிறது.
நிறைகுடத்தை கனவில் கண்டால் செய்யும்
காரியங்களில் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
நீளமாக
தொங்கும் கரிய குழல்(கூந்தல்) கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும்.
நெய்யைக் கனவில் கண்டால் ஆரோக்கியத்தில் உள்ள
குறைபாடுகள் நீங்கி ஆயுள் விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
நோய்
ஏற்பட்டு உடல் வருந்துவதாகக் கனவு கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பட்டத்தை கனவில் கண்டால் அரசு உதவிகள் கிடைப்பதை
சுட்டிக் காட்டுகிறது.
பதர்களை (வெற்றுத் தானியம்) கனவில் கண்டால் தன
விரயம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
பஞ்சை
கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
பவளத்தை கனவில் கண்டால் நோயில்லாமல் வாழ்வதை
சுட்டிக் காட்டுகிறது.
பனி
பெய்வதாக கனவு கண்டால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
பாடும்
பறவையை கனவில் கண்டால் மன மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
பாம்பாட்டியைக் கனவில் கண்டால் நன்மை உண்டாகும்
என்பதைக் குறிக்கிறது.
பாழான
வீட்டைக் கனவில் கண்டால் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு துன்பம் உண்டாகும்
என்பதைக் குறிக்கிறது.
பிணத்தைக் கனவில் கண்டால் பொருட்சேர்க்கை
மிகுதியாகும் என்பதைக் குறிக்கிறது.
பிரசவ
வலியில் உள்ள பெண்ணைக் கனவில் கண்டால் பணியில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
பித்தம் பிடித்தவனை கனவில் கண்டால் செல்வ
செழிப்பு உண்டாகும்.
புத்தகத்தை (வண்ணப் படங்களுடன்) கனவில் கண்டால்
மகிழ்ச்சியான செய்திகள் வரும் என்பதைக் குறிக்கும்.
புளியை
கனவில் கண்டால் உற்றார் உறவினர்களை சந்திப்போம் என்பதைக் குறிக்கிறது.
புற்றை
(பாம்பு புற்று) கனவில் கண்டால் இன்பம் உண்டாகும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக