Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஜூன், 2019

குளு குளு குற்றாலம் !!

Image result for குளு குளு குற்றாலம் !!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com


மூலிகைக் குளியலான அருவிகளைக் கொண்ட குற்றாலத்தை தென்னகத்தின் 'ஸ்பா" என வர்ணிக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதிதான் குற்றாலம்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.

குற்றாலம் என்ற பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பிறக்கும். திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தூரத்திலும், தென்காசியிலிருந்து 5 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக குற்றாலம் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

குற்றாலம்... அருவிகள் சார்ந்த இடம் மட்டுமல்ல, தெய்வீகமான இடமும் கூட... சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை இங்குதான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு இருக்கின்றன.

தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனது குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளார்.

எப்படி செல்வது?

சென்னையிலிருந்து வரும் ரயில்களில் தென்காசி வரை செல்லலாம் அல்லது திருநெல்வேலி செல்லும் பேருந்துகளில் ஏறி தென்காசியில் இறங்கலாம். அங்கிருந்து நகர பேருந்து, ஆட்டோ போன்றவற்றில் குற்றாலத்தை அடையலாம்.

விமானம் வழியாக :

தூத்துக்குடி (90 கி.மீ), மதுரை (200 கி.மீ).

ரயில்வண்டி வழியாக :

தென்காசி (6 கி.மீ).

செல்லும் நேரம் :

ஜூன் - செப்டம்பர் பிரமாதமான காலம். வருடத்திற்கு சில மாதங்கள்தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே, குற்றாலம் செல்ல திட்டமிட்டிருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும்.

எங்கு தங்குவது?

தென்காசி மற்றும் குற்றாலம் நகரில் தங்கும் விடுதிகள் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள் :

ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ள படகு சவாரி.

தெற்குமலை எஸ்டேட் - தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.

சிறு குழந்தை பூங்காக்கள்.

பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை.

இதர சுற்றுலாத் தலங்கள் :

பாலருவி கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி. பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறு, குற்றாலத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது.

அகஸ்தியர் அருவி, பாணத்தீர்த்தம் அருவி, பாபநாசம் (லோயர்) அணை, பாபநாசம் (உயர்), காரையார் அணை, சேர்வலார் அணை, மணிமுத்தாறு அணை, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் அனைத்தும் பாபநாசம் அருகே உள்ளது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக