Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஜூன், 2019

அமெரிக்க சுதந்திர தேவி சிலை !!


Image result for அமெரிக்க தேவி சிலையை ஆங்கிலத்தில்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com


அமெரிக்கா என்றவுடன் நம் நினைவில் வரும் அடையாள சின்னங்களில் ஒன்றுதான் சுதந்திர தேவி சிலை. நியூயார்க் துறைமுக வாயிலில் அமைந்துள்ள லிபர்டி தீவு எழில் கொஞ்சும் தீவு ஆகும். இத்தீவிற்கு, மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதே சுதந்திர தேவி சிலை.

1886ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி இந்த சிலை திறக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய சுதந்திர தேவி சிலையினை உலக வரலாற்றின் ஒப்பற்ற பரிசு என்று கூறலாம்.

அமெரிக்க தேவி சிலையை ஆங்கிலத்தில் Statue Of Liberty  என்று கூறுவர். ஆனால், இந்த சிலையின் முழுப்பெயர் Liberty Enlightening The World என்பதே ஆகும்.

ஒரு வருடத்தில் மட்டும், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை காண்பதற்காகவே சுமார் 32 லட்சம் சுற்றுலாப்பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.

சுதந்திர தேவி சிலையின் சிறப்புகள் :

அமெரிக்க சுதந்திர தேவி சிலையானது பச்சை வண்ணம் உடையது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், உண்மையில் இந்த சிலை முதலில் வெளிர்சிவப்பு பழுப்பு (சுநனனiளா டீசழறn) நிறத்தில் இருக்க வேண்டும் என்றுதான் தீர்மானிக்கப்பட்டு பிறகு மாற்றப்பட்டது.

இந்த சுதந்திர தேவி சிலை சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது. அமெரிக்காவின் தேசியச் சின்னமாக விளங்குகிறது.
அமெரிக்க சுதந்திர தேவியின் தலையில் ஏழுமுற்கள் போல் கொண்ட கிரீடம் உள்ளது. ஒவ்வொரு முற்களும் உலகில் உள்ள ஏழு கடல் மற்றும் ஏழு கண்டங்களை குறிப்பிடுபவை ஆகும்.

இது 1984ஆம் ஆண்டு யுனொஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர். இச்சிலையை வடிவமைத்தவர் பிரெடெரிக் பார்த்தோடியால் (குசநனநசiஉ யுரபரளவந டீயசவாழடனi) எனும் சிற்பி ஆவார்.

கடல்வழியாகச் செல்பவர்கள் தூரத்திலிருந்து பார்க்கும்போது, கம்பீரத் தோற்றமுடைய ஒரு பெண்மணி சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியில் இருப்பது போன்ற தோற்றத்துடனும், கடலில் மிகப் பெரிய வீரன் வெற்றிக் களிப்போடு தீச்சுடரை ஏந்திவருவது போன்ற கம்பீரத் தோற்றத்துடனும் காட்சியளிக்கிறது.

சுதந்திர தேவி சிலையானது ரோமபுரி கடவுளான டுiடிநசவயள என்பவரை ஊக்கம் கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவமாகும்.

சுதந்திர தேவி சிலையின் தலைப்பகுதி 1878ஆம் ஆண்டு பாரிசில் நடந்த றுழசடன'ள குயசை எனும் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

லிபர்டி எனும் தீவில் வாழ்ந்து வரும் ஓர் குடும்பம் சுதந்திர தேவி சிலைப் போன்றே வீட்டைக்கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.

சுதந்திர தேவி சிலைக்கு ஒரு வருடத்தில் ஏறத்தாழ 600 முறையாவது மின்னல் தாக்குதல் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக