இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
கிராமங்களில் நாம் மறந்தவை
தட்டாங்கல் ஆட்டம் ஒரே மாதிரியான
உருண்டையான சிறு கூழாங்கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும்
விளையாட்டு. இது பாண்டிக்கல் என்றும் அழைக்கப்படும்.
இந்த விளையாட்டு வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு எண்ணிக்கையுள்ள கற்களைக் கொண்டு விளையாடப்படுகிறது.
தேவையானவை
:
சிறு கூழாங்கற்கள்.
தேவையான
கற்களின் எண்ணிக்கை :
ஐந்து (அ) ஐந்திற்கும் மேற்பட்ட
எத்தனை
பேர் விளையாடலாம்?
இரண்டு பேர் (அ) குழுவாக
எப்படி
விளையாடுவது?
கற்களை கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை
எடுத்து மேலே எறிந்து, அது கீழே விழுவதற்குள் கீழே இருக்கின்ற கல்லை ஒன்று,
இரண்டு, மூன்று என்ற முறைப்படி எடுக்க வேண்டும்.
ஒன்னான், ரெண்டான், மூணான், நாலான்
என்று விளையாடிய பின் ஒரு கல்லை புறமுன்கையில் வைத்து (உள்ளங்கையின் எதிர்புறம்)
அந்தக் கல் கீழே விழுந்து விடாமல் விரல்களை மடக்கி மற்ற கற்களைப் பிடிக்க
வேண்டும்.
பின்பு ஐங்கல்லையும்
போட்டுப்புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி பிடிக்கச்சொன்ன கல்லைப் பிறவற்றுடன்
மேலெறிந்து பிடித்துக்காட்டல் வேண்டும்.
இவ்வாறு விளையாடினால் பழம்
பெற்றவராவார். மீண்டும் முதலிலிருந்தே தொடர வேண்டும். மேலே எறிந்த கல்லை
தவறவிட்டால், மற்றொருவர் ஆட்டத்தை தொடரலாம்.
ஏன்
தட்டாங்கல் ஆட வேண்டும்?
தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக
பிடிக்கும் திறன் மேம்படுகிறது.
கையும், கை நரம்புகளும் வலுப்பெறுகிறது.
விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த
ஓட்டம் அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை மேம்படும்.
நவீன காலத்தில் உள்ள குழந்தைகளுக்கு
தட்டாங்கல் என்று ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாது.
வீட்டிற்குள்ளேயே விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தைகளுக்கு இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கொண்டு சேர்ப்போம்,
பாரம்பரியத்தை மீட்போம்...
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக