இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
பிரஞ்சு மன்னன் பதினான்காம் லூயி தன்னை
சூரியக் கடவுள் என்று அழைத்துக் கொண்டான். இவன் காலத்தில் வீண் ஆடம்பரத்தை பறை
சாற்றும் விதத்தில் கட்டப்பட்டது தான் வெர்சேல்ஸ் மாளிகை. இந்த மாளிகை பிரான்ஸ்
நாட்டையே திவால் ஆக்கி கட்டப்பட்ட மாளிகை ஆகும். இதனைக் கட்டி முடிக்க 50
வருடங்கள் ஆயிற்று. அதிலும் பல அப்பாவி மக்கள் கூலி இல்லாமல் வேலை செய்ய
நிர்பந்திக்கப் பட்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் கொள்ளை நோய் தாக்கி இறந்தனர்.
இந்த மாளிகையில் மன்னனின்
மேற்பார்வையில் 250 ஏக்கர் பரப்பளவில் தோட்டம் அமைக்கப்பட்டது. ஏராளமான நீர்
ஊற்றுகள், மிருகக் காட்சி சாலைகள், பூங்காக்கள் என இந்த மாளிகையில் அனைத்தும்
இருந்தது. இது தவிர பிரம்மாண்டமான கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டு அதில் படகு
விடப்பட்டது.
1682 இல் அரசர் தனது பரிவாரங்களுடன்
இந்த மாளிகைக்கு குடி ஏறினார். 1789 ஆம் ஆண்டு வரையில் வெர்சேல்ஸ் தான் பிரான்சின்
தலை நகரமாக இருந்தது. இங்கு கடல் போன்ற படையும் பராமரிக்கப்பட்டது. இப்படியாக
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அரசன் மறைந்த பிறகு அவனது மகன் 15 ஆம் லூயி மேலும் பல
கட்டடங்களை கட்டினான். அதன் பிறகு வந்த 16 ஆம் லூயியும் பல அபிவிருத்திகளை
செய்தான்.
இந்தக் கோலாகல வாழ்க்கைக்கு 1779 இல்
ஏற்பட்ட பிரஞ்சுப் புரட்சி முற்றுப் புள்ளி வைத்தது. அந்தப் புரட்சியின் சமயத்தில்
மாளிகையில் இருந்த பல பொருட்கள் களவு போயின. இறுதியில் அப்படிப் பார்த்துப்
பார்த்து கட்டிய மாளிகை பராமரிக்க முடியாமல் சிதிலம் அடைந்து போனது.
பிற்பாடு 19 ஆம் நூற்றாண்டில்
அமெரிக்காவின் உதவி உடன் அந்த மாளிகை பழுது பார்க்கப்பட்டு இன்று அது ஒரு
அருங்காட்சியமாக உள்ளது. இந்த மாளிகையில் 1400 நீரூற்றுகள் இருப்பது இன்னொரு
சிறப்பம்சம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக