
கடந்த சில வருடங்களில் ஸ்மார்ட் டிவிகளில் புதிய அம்சங்கள் மற்றும் அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் அதிகமாக இடம்பெறுவதால் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெருகின்றன. குறிப்பாக சியோமி, சாம்சங் உட்பட பல்வேறு நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தான் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வரும் அனைத்து பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகளிலும் யூடியூப் உட்பட பல செயலிகள் இடம்பெறுகின்றன. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இப்போது இந்தியாவில் கிடைக்கும் வாங்கச் சிறந்த டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட் டிவி மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.
சியோமி மி 4ஏ ப்ரோ 32-இன்ச் டிவி (விலை ரூ.13,999)
சியோமி மி 4ஏ ப்ரோ 32-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 16:09 என்ற திரைவிகிதம் மற்றும் 178-degree wide viewing angle உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது. அதேபோல் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரிவசதி இடம்பெற்றுள்ளது. பின்பு 64-பிட் குவாட்-கோர் Amlogic பிராசஸர் வசதி இருப்பதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 7th generation imaging engine மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி.
சியோமி மி 4ஏ ப்ரோ 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலில் பேட்ச்வால் 3.0 ஆதரவு, கூகுள் பிளே ஸ்டோர் உடன் பல ஆப் வசதிகள் (Netflix|Prime Video|Disney+Hotstar|Youtube), Chromecast ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களும் உள்ளன.மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 20 வாட் ஸ்பீக்கர் உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் குறிப்பிட்ட தள்ளுபடி கிடைக்கும்.
ஒனிடா 32-இன்ச் ஸமார்ட் டிவி (விலை ரூ.14,149)
ஒனிடா 32-இன்ச் Fire TV பதிப்பு கொண்ட ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.14,149-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலை அமேசான் தளத்தில் வாங்கும் பயனர்களுக்கு குறிப்பிட்ட சலுகையும் உள்ளது. குறிப்பாக ஒனிடா 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1366x768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 3 எச்டிஎம் போர்ட்,
1 யுஎஸ்பி போர்ட், டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட் ஆடியோ வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு யூடியூப், பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனிலிவ் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.
ரியல்மி 32-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி (விலை ரூ.14,999)
ரியல்மி நிறுவனத்தின் 32-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெறுள்ளது என்றுதான் கூறவேண்டும். ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவி மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் கார்டெக்ஸ்-ஏ54 சிபியு ஆதரவும் உள்ளது. மேலும் மாலி-470 எம்பி3 ஜபியு ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் .
இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை இது டால்பி ஆடியோவுடன் 24று குவாட்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள். மேலும் இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக இரண்டு ஆல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்களைக் கொண்டுள்ளது.ரியல்மி 32-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி ஆல் இன் ஒன் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப்பிற்கான வெவ்வேறு பிரத்யேக பொத்தான்களுடன் வருகிறது.மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூ.எஸ்.பி போர்ட்கள், எஸ்.பி.டி.எஃப், டி.வி.பி-டி 2 மற்றும் ஈதர்நெட் போர்ட்களை ஆதரிக்கிறது இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சாதனத்தை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.
சாம்சங் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி 2020 எடிஷன் (விலை ரூ.14,990)
சாம்சங் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி 2020 எடிஷன் ஆனது 1366 x 768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் Tizen என்ற இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.
இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியில் 20 வாட் ஸ்பீக்கர் ஆதரவு மற்றும் Dolby Digital Plus வசதியும் உள்ளது எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு சோனிலிவ், ஈரோஸ் நவ், ஜியோ சினிமா, கானா, யூடியூப், பேஸ்புக், ஸ்பாடிஃபை, இந்தியா டுடே, ஆஜ் தக், சன் நெக்ஸ்ட், பிக் ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஆப் வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
குறிப்பாக சாம்சங் 32-இன்ச் எச்டி ரெடி மாடலில் வாய்ஸ் அசிஸ்டண்ட், பிசி மோட், Home Cloud, Live Cast, Screen Share, Universal Guide, Web Browser உள்ளிட்ட ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.14,990-ஆக உள்ளது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும்.
கோடக் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி (விலை ரூ.13,499)
கோடக் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் யூடியூப், பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப் வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. பின்பு 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், க்ரோம் காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், 24 வாட் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கோடக் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,499-விலையில் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும்.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக