Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஜூலை, 2020

இன்றைய கடி... கடல்ல அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்யலாம்?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------------------       சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
-----------------------------------------------------------------------
அரண்மனை பாதுகாவலர் : இதுல உக்காராதீங்க. இது திப்பு சுல்தானோட நாற்காலி.
சீனு : கவலைப்படாதே! அவர் வந்ததும் எந்திரிச்சிடுறேன்.
அரண்மனை பாதுகாவலர் : 😏😏
-----------------------------------------------------------------------(விமான நிலையத்துக்கு பக்கத்துல வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுக்களை விற்று கொண்டிருந்தான்.)

கடைக்காரர் : சார்... பாராசூட் வாங்கிக்கிட்டு போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைச்சுக்கலாம் சார்...
பயணி : பாராசூட் என்ன விலை?
கடைக்காரர் : ரெண்டாயிரம் ரூபாய் சார்..
பயணி : சரி.. வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து குதிக்கும்போது அது விரியலன்னா?
கடைக்காரர் : பணம் வாபஸ் சார்.
பயணி : 😳😳
-----------------------------------------------------------------------
ராஜா : கண்டக்டருக்கும், டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?
பாபு : தனித்தனியா டிக்கெட் கொடுத்தா கண்டக்டர்... மொத்தமா கொடுத்தா டிரைவர்!
ராஜா : 😂😂
-----------------------------------------------------------------------
             பொன்மொழிகள்...!!
-----------------------------------------------------------------------
⭐ நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல... மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்.

⭐ எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதுதான். அதை வெற்றி கொள்வதற்கான ஒரே வழி.

⭐ வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் செயல்பட்டால் வெற்றியை இலகுவாக அடைந்துவிடலாம்.
-----------------------------------------------------------------------
               இன்றைய கடி...!!
-----------------------------------------------------------------------
பல் வலிக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா?
.
.
.
பல்லுதான்...

கடல்ல அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்யலாம்?
.
.
.
சொரிஞ்சு விடலாம்.

புல்லு (புட்கள்) சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியும்... எப்படின்னு தெரியுமா?
.
.
.
எந்த மாடாவது கண்ணாடி போட்டு பாத்துருக்கியா?
-----------------------------------------------------------------------
          குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------------------------
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

விளக்கம் :

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாக துன்பமுற்று கெட்டொழிவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக