-----------------------------------------------------------------------
சிரிக்கலாமே !!
-----------------------------------------------------------------------
கவிதா : உன் தலைமுடி இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி?
சுனிதா : காலையில ஷாம்பு போட்டுக் குளிப்பேன். சாயங்காலம் ஹேர் ஆயில் தடவுவேன்.
கவிதா : அப்போ நைட்டு?
சுனிதா : கழட்டி ஆணியில மாட்டிடுவேன்.
கவிதா : 😂😂
-----------------------------------------------------------------------
மனைவி : என்னங்க நீங்க... சின்னப்பையனை பாத்துக்குறதுக்கு இந்த பாடுபடுறீங்க... அவன் எதை கேக்குறானோ அதை வாங்கிக் கொடுங்க.
கணவன் : வேண்டாம்டி... விவரம் தெரியாம பேசாத.
மனைவி : என்ன விவரம் தெரியனும்... பேசாம அவன் கேக்குறதை வாங்கிக் கொடுங்க. கொஞ்ச நேரம் பிள்ளைய பாத்துக்க முடியல... இதுல வாய் மட்டும்...
கணவன் : அடியே... அவன் எனக்கு இந்த அம்மா வேண்டாம்.. அதோ அங்கே மஞ்சள் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு உக்காந்துருக்காங்களே! அந்த அம்மாவை வாங்கிக் கொடுங்கன்னு கேக்குறான்டி. அவன் ஆசைய நிறைவேத்தட்டுமா?
மனைவி : 😏😏
-----------------------------------------------------------------------
சிந்தனை முத்துக்கள் !!
-----------------------------------------------------------------------
ஒருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும். யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஒன்றைக் கொடு.
-----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
-----------------------------------------------------------------------
மனதை தூய்மை செய்.
பிறருக்கு நன்மை செய்.
சமூகத்திற்கு சேவை செய்.
முகம் மலர்ந்து உதவி செய்.
பொதுநலம் ஆற்ற துணிந்திடு.
சான்றோர்களுக்கு பணிந்திடு.
தூய காற்றை உணர்ந்திடு.
பெருமையோடு நீ செயல்படு...
-----------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
-----------------------------------------------------------------------
1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும். அவன் யார்?
2. பிடுங்கலாம் நடமுடியாது. அது என்ன?
3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான். அவன் யார்?
4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல. அது என்ன?
விடைகள் :
1. தேள்
2. தலைமுடி
3. வெங்காயம்
4. கரும்பு
5. விழுது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக