பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 17 வயது சிறுவன் ஒருவன் இந்த விளையாட்டினை தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். தனது தாயின் மொபைல் போனை பயன்படுத்து தொடர்ந்து விளையாடி கொண்டே இருந்துள்ளார்.
சிறுவன் அடிக்கடி செல்போனை பயன்படுத்துவதை பார்த்த பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதற்கு ஆன்லைனில் படிப்பதாக கூறி சமாளித்துள்ளார். இப்படி சென்று கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் பப்ஜி விளையாட்டில் அடுத்தடுத்த கட்டங்கள் செல்வதற்காக தனது பெற்றோர்களின் மூன்று வங்கி கணக்குகளின் இருந்த பணத்தை செலவழித்துள்ளார்.
இப்படி அடிக்கடி செலவு செய்து இவ்வாறாக ரூ.16 லட்சத்தை செலவு செய்துள்ளார். வங்கியில் இருந்து மெசெஜ் உடனடியாக சிறுவன் அழித்து விடுவான். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் தந்தைக்கு தெரிய வர அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி பணத்தை மீட்க உதவி கேட்டுள்ளார். ஆனால் அது நடக்காத காரியம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து சிறுவனை வாகனங்கள் சீர் செய்யும் மெக்கனிக் கடையில் சேர்த்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக