Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 ஜனவரி, 2021

Amazon சொந்தமாக 50-இன்ச், 55-இன்ச் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது: விலை, அம்சங்கள்!

 

அமேசான் நிறுவனம் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் தனது முதல் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகம் செய்துள்ளது.அமேசான் பேஸிக்ஸ் தனது முதல் ஸ்மார்ட் டிவிகளை சத்தம் போடாமல் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய அமேசான் பேஸிக்ஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது 50 இன்ச் மற்றும் 55 இன்ச் என்கிற இரண்டு அளவு வகைகளில் வருகின்றன.

புதிய அமேசான் பேஸிக்ஸ் ஃபயர் டிவி எடிஷன் டிவிகள் ஆனது 4 கே எச்டிஆர் எல்இடி டிஸ்ப்ளே பேனல்களுடன் முறையை டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் பார்மட்களுக்கான எச்டிஆர் மற்றும் ஆடியோவிற்கான ஆதரவை கொண்டுள்ளது. இவைகள் ரூ.29,999 முதல் என்கிற விலைக்கு வாங்க கிடைக்கின்றன.

நுழைவு நிலை 4 கே ஸ்மார்ட் டிவி பிரிவில், குறிப்பாக சியோமி, டி.சி.எல், ஹைசென்ஸ் மற்றும் வு போன்ற பிராண்டுகளுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அறிமுகமான இரண்டு ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவிகளும் ஏற்கனவே அமேசான் இந்தியா இணையதளத்தில் வாங்க கிடைக்கின்றன.

அமேசான் பேஸிக்ஸ் ஃபயர் டிவி எடிஷன் அல்ட்ரா-எச்டி எல்இடி டிவி அம்சங்கள்:

அமேசான் பேஸிக்ஸிலிருந்து வெளியாகியுள்ள புதிய ஸ்மார்ட்டிவிகள் 50 இன்ச் (AB50U20PS) மற்றும் 55 இன்ச் (AB55U20PS) என்கிற இரண்டு அளவுகளில் கிடைக்கின்றன - இவை இரண்டும் அல்ட்ரா-எச்டி (3840x2160- பிக்சல்) எல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளன, உடன் முறையே டால்பி விஷன் பார்மட் வரை எச்டிஆருக்கு ஆதரவு மற்றும் டால்பி அட்மோஸிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. இவைகள் 20W ஸ்பீக்கர் அவுட்புட் உடன் வருகின்றன.


இந்த 2 ஸ்மார்ட்டிவிகளும் குவாட் கோர் அம்லோஜிக் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இதில் மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள் மற்றும் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் உள்ளன. இவைகளின் டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் பீக் ரெஃப்ரெஷ் மற்றும் 178 டிகிரி வரை "கோரப்பட்ட" பார்க்கும் கோணத்தைக் கொண்டுள்ளது.


பெயரிலேயே குறிப்பிடுவது போல, அமேசான் பேஸிக்ஸ் ஸ்மார்ட் டிவிகள் ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவிகள் ஆனது அமேசானின் ஃபயர் டிவி ஓஎஸ் மூலம் இயங்குகின்றன. இது ஃபயர் டிவி ஸ்டிக் (வகைகள்) ஸ்ட்ரீமிங் சாதனங்கள் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஓனிடா மற்றும் அகாய் போன்ற பிற பிராண்டுகளின் ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவிகளில் இருக்கும் அதே இயக்க முறைமை தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை நீங்கள் Amazon ecosystem-ஐ பயன்படுத்த விரும்பவில்லை என்றால் உங்கள் சொந்த செட் டாப் பாக்ஸையும் இணைக்கலாம்.

ஃபயர் டிவி ஓஎஸ் ஆனது அமேசான் ப்ரைம் வீடியோவுடன் சிறப்பாக செயல்படத் தயாராக இருந்தாலும், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற பிற சேவைகள் ஃபயர் டிவி ஸ்டிக்கைப் போலவே இயங்குதளத்திற்கான ஆப்களின் வடிவத்திலேயே கிடைக்கின்றன.


நீங்கள் அமேசானின் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆன அலெக்ஸாவையும் பயன்படுத்தலாம், அதனிடம் திரைப்படங்கள், இசை அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கும்படி கேட்கப்படலாம், அத்துடன் தேவையான தகவல்களையும் தேடலாம் அல்லது வீட்டைச் சுற்றியுள்ள இணக்கமான IoT சாதனங்களையும் கட்டுப்படுத்தலாம்.

டிவி பிரிவில் அமேசானின் நுழைவு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது.அது சாத்தியமாகி உள்ள நிலைப்பாட்டில், போட்டித்தன்மை மிக்க விலை நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் நுழைவு நிலை 4 கே பிரிவின் கீழ் டிவிகளை தயாரிக்கும் சியோமி மற்றும் ஹைசென்ஸ் போன்ற நிறுவனங்கள் என்ன செய்யப்போகின்றன என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக