Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 ஜனவரி, 2021

ஹேக்கர்களிடம் இருந்து பேஸ்புக்கை பாதுகாக்கும் Security Keys.. வாங்குவது எப்படி..!!

 

பேஸ்புக் வழங்கும் பாதுகாப்பு அம்சம்: சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் (Facebook), தனது பயனர்கள், பேஸ்புக் கணக்கை பாதுகாப்பாக வைக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. 

அடுத்த ஆண்டு முதல், நிறுவனம் உலகளாவிய பயனர்களுக்கு பிஸிகல் செக்யூரிட்டி கீயை  (Physical Security Keys)வழங்கும். அதிகரித்து வரும் ஹேக்கிங்  சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் கூறுகிறது.

பயனர்கள் இந்த 'Physical Security Keys' அல்லது டோக்கனை 'சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தோ அல்லது ஆன்லைனிலிருந்தோ வாங்க முடியும். பிறகு அவர்கள் பேஸ்புக்கில் 'கீயை' பதிவு செய்ய வேண்டும், அப்போதுதான் 'கீ' பயன்படுத்த முடியும் என பேஸ்புக்கின் பாதுகாப்புக் கொள்கையின் தலைவர் நதானியேல் க்ளீக்கரின் தெரிவித்தார்.

'Physical Security Keys' ஒரு பென் டிரைவ் போல இருக்கும்,.இது ஒரு யூ.எஸ்.பி போர்ட்டில் நிறுவப்பட வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பேஸ்ஸ்புக் நிறுவனம் 'Physical Security Keys' விலை என்ன என்பதை வெளியிடவில்லை, ஆனால் இது தொடர்பாக பேஸ்புக் விரைவில் அறிவிக்கும் என்று நம்பப்படுகிறது. கூகிள் முதன்முதலில் 'யூ.எஸ்.பி செக்யூரிட்டி கீ' ஐ 2014 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹேக்கர்கள் உங்கள் பேஸ்புக் கணக்குக்களை ஹேக் செய்து தரவுகலை திருடுவதை தவிர்ப்பதற்காக பேஸ்புக் இதுவரை இரண்டு-நிலையிலான வெரிபிகேஷன் மற்றும் ரியல் டைம் மானிடரிங்கை பயன்படுத்துகிறது, ஆனால் அடுத்த ஆண்டு முதல் இது 'Physical Security Keys', அதாவது பெண்ட்ரைவ் போன்ற தோற்றத்தை கொண்ட கீயை  அறிமுகப்படுத்துகிறது. இதனை பயன்படுத்தினால், உங்கள் பாஸ்வேர்ட்டை ஹேக்கர் ஹேக் செய்தால் கூட, உங்கள் கணக்கில் உள்ளே நுழைந்து தரவுகளை எடுக்க முடியாது என்று நிறுவனம் கூறுகிறது.  

 

'Physical Security Keys', அதாவது பெண்ட்ரைவ் போன்ற தோற்றத்தை கொண்ட கீயை   பயன்படுத்தினால், உங்கள் பாஸ்வேர்ட்டை ஹேக்கர் ஹேக் செய்தால் கூட, உங்கள் கணக்கில் உள்ளே நுழைந்து தரவுகளை எடுக்க முடியாது என்று நிறுவனம் கூறுகிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக