Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 ஜனவரி, 2021

முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்: காரணம் என்ன?

சொல்லவேண்டும் என்றால் எண்ணை

ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்புகளுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி உலக அளவில் முன்னணி பணக்காரராக திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் எண்ணை சுத்திகரிப்பு ஆலை, கியாஸ் ஆலை, ஜியோ டெலிபோன் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் அவருடைய சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, இந்திய பங்குச்சந்தைகள் ஒழுஙகமுறை வாரியம், தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்துள்ளது. அதாவது செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி கடந்த 2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த நிலையில் முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி மற்றும் மும்பை எஸ்.இ.எஸ் நிறுவனம். நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனம் ஆகியவற்றிக்கு அபராதம் விதித்து உள்ளது.

குறிப்பாக ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடியும், முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடியும், நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடியும், மும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக